தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/முதல்வர் பேசுகிறேன்!

முதல்வர் பேசுகிறேன்!

முதல்வர் பேசுகிறேன்!


PUBLISHED ON : டிச 23, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 23, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வணக்கம். நான் பானுமதி; ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. இப்போ எனக்கு 69 வயது; சிங்கப்பூர் பள்ளியில தன்னார்வலர் பணியில இருக்குறேன். 1973 - 2007 இடையிலான என் ஆசிரியப் பணி அனுபவத்தின் அடிப்படையில சில விஷயங்களை பகிர்ந்துக்க விரும்புறேன்.

பணியில் முதல் நாள்

நான் படிச்ச பெரம்பலுார் அரசு பள்ளியிலேயே ஆசிரியையா காலடி எடுத்து வைச்ச தருணம் இன்னும் என் மனசுல உறைஞ்சிருக்கு. அன்னைக்கு என்கிட்டே படிச்ச எல்லாரும் முதல் தலைமுறையா படிக்க வந்தவங்க! 'ஒவ்வொரு வீட்டுலேயும் அறிவுச்சுடரை ஏத்துறோம்'ங்கிற அந்த எண்ணமே மனசுல அவ்வளவு பூரிப்பை தந்தது. அன்னைக்கு என்னோட மாத ஊதியம், 175 ரூபாய்; ஆண்டுக்கு, 5 ரூபாய் உயர்வு!

பெண்ணும் கல்வியும்

எங்கப்பா மருத்துவரா இருந்தும், கல்லுாரிக்குப் போக நான் போராட வேண்டியிருந்தது. அந்த காலத்துல பெண்களுக்கு இருந்த இன்னொரு சவால் மாதவிடாய் பிரச்னை; அப்போ, நாப்கின் கிடையாது; பழைய துணிகள்தான்! என்கிட்டே படிச்ச பல மாணவியர்கிட்டே உள்ளாடைகள் வாங்க கூட வசதி இருக்காது. பள்ளி மூலமா அதுக்கு ஏற்பாடு பண்ணினேன். இந்த விஷயத்துக்காக பொண்ணுங்க படிப்பு நின்னுடக்கூடாதுங்கிறதுல நான் ரொம்பவே உறுதியா இருந்தேன்.

தேடல் என் ஆசான்

எங்க காலத்துல ஆசிரியர் பணிக்கு ஆசைப்படுறவங்க, ஆங்கிலம் படிச்சா இரண்டு தாள்கள் திருத்தணும்னு அதை தேர்வு பண்ண மாட்டாங்க. ஆனா நான் முதுகலையில ஆங்கில இலக்கியம் தேர்வு பண்ணினேன். காரணம்... வேலை அதிகமுள்ள இடத்துலதானே தேடலுக்கான அவசியம் இருக்கும்!

கதை எனும் கருவி

மாணவர்களுக்கு பாடம் நடத்துறதுல இன்னைக்கு எத்தனையோ புதுமைகள்; ஆனா, எந்த தொழில்நுட்ப உதவிகளும் இல்லாத அந்த காலத்துல எனக்கு கைகொடுத்தது கதைகள்தான்! கற்பிக்கிற பாடத்தை கதை வடிவத்துல மாற்றி அதை பாடமா சொன்னப்போ மாணவர்கள் மனசுல அது காட்சிகளா பதிஞ்சது!

உளவியல் அவசியம்

கடந்த தேர்வுல 90 மதிப்பெண் எடுத்து இந்த தேர்வுல 80 மதிப்பெண் எடுக்குற மாணவனை கண்டிக்கணும்; கடந்த தேர்வுல 20 மதிப்பெண் எடுத்து இந்த தேர்வுல 25 மதிப்பெண் எடுக்குற மாணவனை தட்டிக் கொடுக்கணும். இந்த உளவியல் திறன் தலைமை ஆசிரியர்களுக்கு அவசியம் இருக்கணும்.

பணியில் இறுதிநாள்

கரூர் பள்ளியிலதான் என் கடைசி பணிநாள். காலையில மாணவர்கள் மலர் துாவி வரவேற்கிறாங்க. மாலை கலை நிகழ்ச்சியில என்னை கவுரவப்படுத்தினாங்க. அரசு ஓய்வு கொடுத்துட்டாலும், மனசு இன்னமும் அந்தநாள் ஞாபகத்துல அந்த பள்ளி சூழல்லதான் இருக்கு; நான் புண்ணியம் பண்ணியிருக்கிறதா நம்புறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us