தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/அவளே சரணம்!

அவளே சரணம்!

அவளே சரணம்!


PUBLISHED ON : டிச 30, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பூரணத்துவம் - தனியொரு மனிதரின் வாழ்வை தர மதிப்பீடு செய்வதற்கான அளவுகோல் எனில், இந்த அளவுகோல் என்பது சிலருக்கு பணம், சிலருக்கு சமூக அந்தஸ்து! மதுரை, கோரிப்பாளையம் முத்து மீனாட்சி சுந்தரத்தின் பூரணத்துவம்...

தாய் மீதான அவரது பாசம்.

பூரணத்துவமான வாழ்க்கையை திட்டமிட்டு அடைய முடியுமா?

அடிப்படையான எண்ணம் இருந்தாலே திட்டம் தன்னால உருவம் பெறும். எங்க அப்பாவையும், அம்மாவையும் அடக்கம் செய்த இடத்துலேயே அவங்களுக்கு கோவில் எழுப்பணும்ங்கிறது என் எண்ணம். ஆனா, அம்மா விஷயத்துல மட்டும் என் எண்ணம் நிறைவேறலை! இந்த குறை என் மனசை அரிச்சுக்கிட்டே இருந்தது. இந்த பரிதவிப்பு மனநிலைதான் தேடலை துாண்டி தீர்வையும் கொடுத்தது. அவங்க முதலாமாண்டு திதிக்கு சிலை எடுத்து வணங்கினதுக்கு அப்புறம்தான் என் வாழ்க்கை பூரணமாச்சு!

நேசித்தவர்களுக்கு சிலை எடுப்பது 'டிரெண்ட்' ஆகிட்டு வருதே?

நல்லதுதானே! எங்க அம்மா சிலையைப் பார்க்குற ஒருத்தர் நிச்சயம் அவங்க அம்மாவை நினைப்பார் இல்லையா; அதுதான் என் அம்மாவுக்கு நான் தேடித்தர்ற பெருமை. சேதுராமன்னு ஒருத்தர் மறைந்த தன் மனைவிக்கு சிலை எடுத்ததைப் பார்த்துதான் நான்கூட இந்த முடிவுக்கு வந்தேன். பழசை நினைச்சு பார்க்குறதும், நன்றி சொல்றதும் மனுஷ லட்சணம். இப்படியான விஷயங்களால அது பரவினா சமுதாயத்துக்கு நல்லதுதானே!

அம்மாவோட ஞாபகங்கள்...

ஐந்து பெண் பிள்ளைகளையும், என்னையும் வளர்த்து ஆளாக்கின அவங்களைப் பற்றி சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும், அடி மனசுல உறைஞ்சு கிடக்கிறது இதுதான்; என் மனைவி கலா கொடுத்த பாலை தொண்டையில நிறுத்தி, என்னையும் அவளையும் ஒருதடவை நல்லா உற்றுப் பார்த்துட்டு, நிதானமா அவங்க கடைசி சுவாசத்தை நிறுத்திக்கிட்ட அந்த கணம்!

அந்த ஆயிரம் விஷயங்களில் சில...

எங்க பூர்வீக சொத்தை தனி மனுஷியா போராடி அம்மா மீட்டெடுத்த விதம்; என் அண்ணன் தவறினப்போ, அப்பாவோட அலட்சியத்தாலதான் மூத்தவனுக்கு முறையான சிகிச்சை இல்லாம போயிடுச்சுன்னு அம்மா அவரோட ஒரு வருஷம் பேசாமலே இருந்த வைராக்கியம்; ஊர்ல முக்கியஸ்தரான அப்பாவை பார்க்க வர்றவங்க கொண்டு வர்ற வெற்றிலை, பாக்கை விற்று எங்க பசியாற்றுன தாய்மை... இப்படி நிறைய!

இந்த சிலையை அம்மாவோட ஆன்மா ரசிக்குமா?

இறக்கும்போது 101 வயசு அவங்களுக்கு! 'அப்பாவுக்கு பண்ணின மாதிரி எனக்கு எதுவும் பண்ணிடாதேப்பா'ன்னு முன்கூட்டியே சொல்லிட்டாங்க. இந்த சிலை முழுக்க முழுக்க என்னோட திருப்திக்காக!

அம்மா பெயர் சொல்லவே இல்லையே?



தங்கத்தாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us