தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/24/7 மகிழ்ச்சி

24/7 மகிழ்ச்சி

24/7 மகிழ்ச்சி


PUBLISHED ON : ஜன 02, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 02, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிலத்தில் விதைகளை விவசாயி துாவிச் செல்ல, அவர் பின்னால் தவ்வி வரும் மைனாக்கள் அதை சேகரிப்பது அழகு. குவைத்தில் பள்ளி ஆசிரியையாக குழந்தைகளுடன் சங்கமித்து இருந்ததாலோ என்னவோ, தன் மகள்கள் 11 வயது அமுதினி, 7 வயது கீர்த்தினி இருவரும் குழந்தை பருவத்தில் துாவிய மகிழ்ச்சிகளை 'மயக்குறு மகள், மகள் கீர்த்தி' எனும் இரு புத்தகங்களாக மாற்றியிருக்கிறார் காயத்ரி சித்தார்த்.

அனல் வீசும் குவைத்தில் இருந்து பேசியவரின் பகிர்தலில் குற்றால சாரல்!

'கலைடாஸ்கோப்' மனசு

வாயோட உட்புறங்கள்ல கடிச்சு புண் ஏற்படுத்திக்கிறது அமுதினிக்கு வழக்கம்; ஒருநாள், 'இப்படி கடிச்சா புது புண் வந்திடும்'னு மிரட்டினேன்; 'அப்போ, புதுசா வந்த குட்டிப் புண்ணுக்கு பெரிய அத்தை புண்ணெல்லாம் கேக் வாங்கிட்டு வந்து 'ஹேப்பி பர்த்டே' பாடுமா'ன்னு கேட்டா; வெடிச்சு சிரிச்சேன்!

குளிக்கிறப்போ சோப்பு குமிழிகளை கைகளுக்குள்ளே பொத்தி வைச்சுக்கிட்டு, 'தண்ணி ஊத்தாதே... சோப்பு செத்துடும்'னு அவ பதறுவா பாருங்க... ஹைய்யோ... அவ்வளவு அழகா இருக்கும்!

'குழந்தை வளர்ப்பு' பெரும் அசதிஇல்லையா?

இன்னைக்கு பெண்கள்கிட்டே, 'தாய்மையில் அன்பும் அக்கறையும் போதும்; தியாகம் தேவையில்லை'ங்கிற தெளிவு இருக்கு! அதனால, குழந்தை வளர்ப்பு அசதியில்லை... சுகம்!

கீர்த்தினி மொழி

* 'ட்டி' - கட்டிக்கோ

* 'ஆய்த்தி' - காயத்ரி

* 'ஐ தவ் வூ' - ஐ லவ் யூ

* 'தாக்கூ' - தேங்க்யூ

* 'ஊஊ' - சுடுது

* 'ஊப்புடு' - யூ டியூப்

* 'பியாத்த' - பிரியா அத்தை.

மயக்கும் பதில்கள்

என் அம்மா வீடு ஈரோட்டுல இருக்கு; அம்மாகிட்டே 'லேப்டாப்' மூலமா 'வீடியோ கால்' பேசுறது வழக்கம்; ஒருதடவை செல்ல கோபத்துல, 'நான் எங்கம்மா வீட்டுக்குப் போறேன்; நான் போனதுக்கப்புறம் யாரை 'அம்மா'ன்னு கூப்பிடுவே'ன்னு கீர்த்தினிகிட்டே கேட்டேன். அவ சொன்ன பதில்...

'லேப்டாப்பை'

கடற்கரை...

'கீர்த்தும்மா... விளையாடினது போதும்; போகலாம் வா'

'இருங்கம்மா... அலை கொஞ்சம் குறைஞ்சோன்னே வந்துடுறேன்!'

'இது என்னோடது' எனும் குழந்தையை ரசிக்கணுமா; திருத்தணுமா?

'தனக்கானது'ங்கிற குழந்தைகளோட உணர்வு ரொம்பவே அழகானது. என் வகுப்புல ஒரு சம்பவம்; தோழியோட பென்சிலை பிடுங்கி எழுதிட்டிருந்த குழந்தைகிட்டே, 'நீ ஏன் பென்சில் கொண்டு வரலை'ன்னு கேட்டதும், 'என் பென்சில்ல எழுதினா அது சீக்கிரம் சின்னதாயிடும்'னு பதில்! பென்சில் இழந்த குழந்தையுமே இதை ரசிச்சு சிரிச்சா! குழந்தைகளோட சுயநலம்... ரசனைக்குரியது.

'மம்மி'களுக்கு செல்லமா ஒரு குட்டு!

காயத்ரி: செடிகளுக்கு வெயில் அவசியம்; 'பாசம்'ங்கிற பேர்ல அதை தடுக்குற கூரையா 'அம்மா' இருக்கக்கூடாது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us