தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/300வது வாரம் கண்ணம்மா

300வது வாரம் கண்ணம்மா

300வது வாரம் கண்ணம்மா


PUBLISHED ON : டிச 11, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 11, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர் - கண்ணம்மா எங்களின் நம்பிக்கை' என்கிறது தமிழகத்தின் பெண்மை; கடந்து வந்த 299 வாரங்களில் இந்நம்பிக்கைக்கு பல வரங்கள்; இதனால் நெஞ்சம் நிறைந்தவர்களின் மகிழ்ச்சியில், 'ஒரு சோறு பதம்' போல் 'ஆண்டிற்கு ஒரு நன்றி' இவை...

*05.03.2017 - அவளே சரணம்

'என் மற்றொரு பாதியான உஷாவோட பெருமையை 'கண்ணம்மா'வுல வாசிச்சிட்டு என்னை அழைச்ச மதுரை சுவாமிநாதன், 'என் மனைவியை இயந்திரமா பார்த்தேன்; இயக்கினேன்; விவாகரத்து ஆயிருச்சு; உங்க வாழ்க்கையை படிச்சதுக்கு அப்புறம் என்னை மிருகமா உணர்றேன்'னு கதறினார். 'இனி, நான் உங்களுக்கு மூணாவது மகள்'னு பாசம் சொன்னாள் தேனி வள்ளி. நிறைவா உணர்ந்தேன்!'

- காலம் சென்ற மனைவியின் பெருமையை காதலோடு பகிர்ந்து கொண்ட பன்முக கலைஞர் 'டிவி' வரதராஜன், சென்னை.

*10.03.2019 - திருமதி விவசாயி

'ஒரு கோப்பை காபிக்கு பின்னால இத்தனை பெரிய உழைப்பு இருக்குதா; வாழ்த்தினவங்க வார்த்தைகள்ல இந்த ஆச்சரியத்தை அப்பட்டமா உணர்ந்தேன்! 'வறட்சி, புயல், மழை பாதிப்புகள்ல இருந்து விவசாயத்தை மீட்கிறது எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டோம்; ரொம்ப நன்றி'ன்னு சொன்ன, 'தினமலர்' வாசகர்களோட வாழ்த்து இன்னும் மனசுல அதே அன்பின் ஈரத்தோட இருக்கு!'

- 'கஜா' புயலில் துவண்ட விவசாயத்தை நம்பிக்கையோடு மீட்டெடுத்த லதா அரசு, கானல்காடு, திண்டுக்கல்.

*15.03.2020 - அன்புள்ள சிஸ்டர்

'உங்களைப் பற்றி 'கண்ணம்மா' பகுதியில படிச்சதும் நேர்ல ஆசிர்வாதம் பண்ணணும்னு தோணுச்சு'ன்னு வந்த சடகோபன் சார், கிளம்புற நேரத்துல, 'என்னம்மா இது... இந்த பழைய ஸ்கூட்டர்ல அவசர நேரத்துல எப்படி பயணம் பண்ணுவீங்க'ன்னு கேட்டு, 88 ஆயிரம் ரூபாய்க்கு புது ஸ்கூட்டர் வாங்கித் தந்தார். மனிதமுள்ள மனிதர்கள் வாசிக்கிற நாளிதழ்... தினமலர்!'

- சக உயிர்களுக்கு உதவும் பெரும் வாய்ப்பாய் தன் செவிலியர் பணியை நேசித்துப் போற்றும் சு.நூர்ஜஹான், தஞ்சாவூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us