தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/மாண்புமிகு மாணவி

மாண்புமிகு மாணவி

மாண்புமிகு மாணவி


PUBLISHED ON : டிச 18, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாண்புமிகு மாணவி 'மூணும் பொம்பளை பிள்ளையாப் போச்சு; எனக்கப்புறம் இந்த கலையை யாரு கவ னிப்பா'ன்னு அப்பா வுக்கு இருந்த பெரும் கவலை என் னால இப்போ இல்லை!'

சின்னவயசுல அப்பாவோட மரப்பட்டறைதான் எனக்கு மைதானம்; மரச்சாமான்கள்தான் விளையாட்டுப் பொருட்கள்! இந்த ஆர்வத்தால, 10 வயசுலேயே மரத்தை செதுக்க துவங்கிட்டேன். இப்போ ஜன்னல், வாசல் கதவுகளுக்கான சித்திரங்களை நுணுக்கமா என்னால இழைக்க முடியும்!

யார் இவர்?



பெயர்: அஞ்சனாஸ்ரீ

வகுப்பு: 9ம் வகுப்பு

பள்ளி: திருக்கோகர்ணம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை.

பெற்றோர்: முத்துக்குமார் - கவிதா

அடையாளம்: மரச்சிற்ப கலைஞர்

'இது ஆண்களுக்கான களம்'னு சொல்றாங்களே...



வேலையில என் நேர்த்தியைப் பார்க்குற வரைக்கும் என்கிட்டேயும் அப்படித்தான் சொன்னாங்க; அப்புறம், 'இந்த சின்னவயசுல இப்படி ஒரு திறமையா?'ன்னு என்னைப் பாராட்டினாங்க!

'காலம்' - உங்க புரிதல் என்ன?



'நாளைக்கு பார்த்துக்கலாம்னு வேலைகளை தள்ளிப் போடுறப்போ காலம் நம்மைப் பார்த்து சிரிக்கும்'னு மனப்பூர்வமா நம்புறேன்.

எங்கள் அஞ்சனாஸ்ரீ



'செல்போனும் கையுமா திரியுற பிள்ளைகள் மத்தியில சிலம்பம், பரதம், தற்காப்புக்கலையை அஞ்சனா நேசிக்கிறா; மரச்சிற்ப கலை அவளுக்கு உயிர்!'

- சு.விஜயபானு, தமிழாசிரியை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us