PUBLISHED ON : டிச 18, 2022

கோவை மாவட்டம் மேட்டுப்பாளை யத்தின் அரசு மருத்துவமனை. ரத்த வங்கி செவிலியராக பணியாற்றும் பிரேமலதாவுக்கு சில ஆண்டுக ளுக்கு முன் வரை ரத்தம் கண்டால் உடல் நடுங்கும்... குமட்டும்!
'நாம அன்பை பகிர்ற மாதிரி ரத்தம் மூலமா உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை சிவப்பணுக்கள் பகிருது; இதுதான் உயிரின் ஆதாரம்'னு தெரிஞ்சபிறகு ரத்தத்தோட அருமை புரிஞ்சுக்கிட்டேன்!' - பதற்றமின்றி பேசும் ச.பிரேமலதாவுக்கு வயது 52.
அந்த நாள்
அவனுக்கு 25 வயசு இருக்கும்; நெஞ்சுல கம்பி குத்தி ரத்தம் கொட்டுது; என் மனசு கடவுள்கிட்டே மன்றாடுது; ஆனா, என் பிரார்த்தனை வீண்; இறந்துட்டான்! எத்தனையோ இழப்புகளை அன்றாடம் சந்திக்கிற எனக்கு அந்த இழப்பை தாங்கிக்க முடியலை. 'அவன் இடத்துல நீங்க என்னைப் பார்த்திருக்கீங்க'ன்னு என் மகன் சொன்னான்; அது உண்மை!
இதுவே வாய்ப்பு
தன்னோட கடைசி நாட்கள்ல, 'என்னை எப்படியாவது காப்பாத்திருங்க... நல்லவனா வாழ ஆசையா இருக்கு'ன்னு ஏங்கின நபர்; மனைவி நோயாளியானதும் அருமை உணர்ந்து கண்ணீர் சிந்தின மீசைக்காரர்; இந்த பணியில நான் பார்த்த இவங்க எனக்கு சொல்லாம சொன்ன அறிவுரை... 'வாய்ப்பிருக்கும் போது சரியா வாழ்ந்திருங்க!'
தற்கொலை
'இவங்களுக்கு பிறக்கணும்; இங்கே பிறக்கணும்'னு நாம முடிவு பண்றதில்லை; அதனால, நம்ம உயிர் மேல நமக்கு உரிமை இல்லை! 'இந்த வாழ்க்கை வேண்டாம்'னு முடிவு பண்றீங்களா... தற்கொலை வேண்டாம்; அந்த நிமிஷத்துல இருந்து தன்னலம் தவிர்த்து மத்தவங்களுக்காக வாழ்ந்து பாருங்க... உயிரோட மதிப்பு புரியும்!
கல் நெஞ்சக்காரி
'இன்னும் 2 மணி நேரம்தான் உயிரோட இருப்பார்'னு என் கணவரை பரிசோதிச்ச டாக்டர் சொன்னதும், சத்தம் போட்டு அழணும் போல இருந்தது; 'நீயே அழுதா உன் மகனுக்கு யார் ஆறுதல் சொல்றது'ன்னு மனசு கேட்டதும் கண்ணீரை மறைச்சுக்கிட்டேன்! 'நர்ஸ் வேலையில மனசு கல்லாயிடுமா'ன்னு பேசினாங்க! அவங்க பார்வையில கல் ஈரமற்றது; என் பார்வையில வலிமையானது!
இரட்டிப்பு மகிழ்ச்சி
விசேஷ நாட்கள்ல, என்னுடன் பணி செய்ற இளையவர்கள் மகிழ்ச்சியா இருக்கட்டும்னு நான் விடுப்பு எடுக்க மாட்டேன். 'ஒரு குடும்பம் சந்தோஷமா இருக்கிறதுல உனக்கும் பங்கு இருக்கு'ன்னு என் மகனுக்கும் புரிய வைச்சிட்டதால அந்த நாட்கள்ல எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
பணி துவக்கம்:
1992முதல் களம்: தனியார் மருத்துவமனை, கோவை.பதவி: செவிலிதுறை அனுபவம்: 30 ஆண்டுகள்.........சுருக்: 'குடும்பம் காக்க'ன்னு உடல்நலன் பாராம உழைக்கிற அத்தனை பேரும் செய்றது குடும்பத்திற்கான துரோகம்!வாய்ஸ் பபுள்: கோபம் நோய்களின் நண்பன்
