தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!


PUBLISHED ON : டிச 25, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இதற்கு அனுமதி கிடையாது' - வீட் டிற்குள் அதிகாரம் குரல் உயர்த்த, அதை மீறி, 'ஏன் இதை செய்கிறேன்' என்பதை தன் வெற்றியால் புரிய வைப்பதும் புரட்சிதான் எனில், பி.காம்., பட்டதாரியான கேஷ்னி ராஜேஷ் புரட்சியாளர்!

திமிர் அழகானதா?

'ஜிம்முக்கு போனா நளினம் போயிடும்; குழந்தை பிறக்காது'ன்னு குடும்பமும் நண்பர்களும் சொன்னப்போ, அவங்க கருத்தை எதிர்த்துப் பேசினேன். அன்னைக்கு அது திமிர்; இப்போ, உலகமே என்னை கவனிக்கிறப்போ அதே திமிர் பேரழகாத் தெரியுது!

'வேர்ல்டு சாம்பியன்ஷிப் கெட்டில்பெல்' போட்டியில் 23 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தங்கம் வென்றிருக்கிறார், 21 வயது கேஷ்னி ராஜேஷ். இப்பிரிவில் தங்கம் வென்றிருக்கும் இந்தியாவின் முதல் பெண் இவர் என்பது மதுரைக்கான பெருமை!

உங்க வெற்றி பெண் சமூகத்துக்கு சொல்ற செய்தி?

நான் கல்லுாரி படிப்பை முடிச்சதுமே திருமண பேச்சை துவக்கின குடும்பம், 'உன் நிபந்தனைகளுக்கு பொருந்தினா மட்டும் சம்மதம் சொல்லு'ங்கிற உரிமையை எனக்கு தந்ததுக்கு என் வெற்றியும் ஒரு காரணம்!

பெண்களின் முதல் எதிரி... தயக்கம்; ஏத்துக்குறீங்களா?

சமாளிக்க முடியாத அளவிற்கு சில பிரச்னைகள்; 'வேர்ல்டு சாம்பியன்ஷிப்' களத்துல இருந்து விலக துணிஞ்சிட்டேன்; அந்தசமயத்துல, 'நீ ஜெயிச்சா இன்னொரு பெண் உன் வழியில மேடை ஏறுவா'ன்னு மனசு சொன்னது; ஜெயிச்சிட்டேன்; இனி, தடுமாற மாட்டேன்!

உங்களின் சின்னச்சின்ன சந்தோஷங்கள்?

பணத்தையும் நேரத்தையும் விரயமாக்குற விஷயங்கள்ல எனக்கு உடன்பாடு இல்லை; என்னோட சந்தோஷம், என் கனவுகளை துரத்திப் பிடிக்கிறதுல மட்டும்தான்!

விரும்பும் சமூக மாற்றம்?

தன் பேச்சை மீறி 'ஜிம்'முக்கு வந்த பெண்ணை தேடி வந்து அடிச்சு இழுத்துட்டுப் போனார் அந்த பெண்ணோட அப்பா. 'எப்போ சார் மாறப் போறீங்க?'ன்னு அன்னைக்கு அவர்கிட்டே கேட்கணும்னு நினைச்சேன். இப்போ, 'கண்ணம்மா' மூலமா அதை கேட்கிறேன். தனி மனிதன் மாறினா சமூகமும் மாறும்தானே!

'வீட்டிலிருந்து பணி' அடிப்படையில் பெங்களூரு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கேஷ்னி, முன்பிருந்த பருமனான உடலமைப்பு காரணமாக விமர்சனங்களுக்கு உள்ளானவர்!

'உருவ கேலி' மன உளைச்சல் தந்திருக்குமே...

தொடர்ந்து இயங்கிட்டே இருக்குற ஆள் நான்; என் நிதானம் சமநிலையை இழக்குறப்போ மைதானத்துக்கோ 'ஜிம்'முக்கோ போயிடுவேன்! மனசுக்கு பிடிச்ச விஷயத்துல என்னை ஒப்படைச்சு வாழ்றதால, எந்த வீண் வார்த்தைகளும் என்னை காயப்படுத்துறது இல்லை.

கேஷ்னியின் புதுப்புது அர்த்தங்கள்*திருமணம்? - பாதை*கனவு? - பிடிமானம்*வெற்றி? - வரம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us