தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/முதல்வர் பேசுகிறேன்!

முதல்வர் பேசுகிறேன்!

முதல்வர் பேசுகிறேன்!


PUBLISHED ON : ஜன 01, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வணக்கம்; நான் ஆஷாதேவி; திருச்சி பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியின் தலைமை ஆசி ரியை; 'கிளைகள் செழிக்க வேருக்கு நீரூற்றுவது முக்கியம்' என்பதால், மாணவர்களின் பெற்றோரிடமும் அன்பு பாராட்டும் குணம் பெற்றவள்!

கல்விக்கு காவல்

'கூலி வேலைக்குப் போயிட்டு நாங்க வீடு திரும்ப ராத்திரி ஆயிடும். பள்ளிக்கூடம் அனுப்பினா நாங்க வர்ற வரைக்கும் என் பொண்ணு வீட்டுல தனியா இருக்கணும். அதனால, படிப்பு வேண்டாம்'னு சொன்ன பெற்றோர்கிட்டே, 'நீங்க வர்ற வரைக்கும் அவளை நான் பார்த்துக்குறேன்'னு உத்தரவாதம் தந்தேன். அந்த மாணவிக்கு காவலா இருக்குறதால தினமும் வீடு திரும்ப இரவு 8:00 மணி ஆயிடும்!

புதிய பாதை

'குப்பை அள்ளினாலும் அதுல முதன்மையா இருக்கணும்'னு என் அம்மா சொல்வாங்க! 'புத்தகத்துல இருக்கிறதை அப்படியே தேர்வுல எழுதாம, உங்களுக்கு என்ன புரிஞ்சுதோ அதை எழுதுங்க. இதன்மூலமா மதிப்பெண் குறையலாம்; ஆனா, உங்க தன்னம்பிக்கை கூடும்'னு என் மாணவர்களுக்கு நான் சொல்றேன்; படிப்பு, கலை, விளையாட்டுன்னு பல தளங்கள்ல என் மாணவர்கள் முதல்வர்கள்!

என் பேராசை

இந்த பள்ளியில 8ம் வகுப்பு வரைக்கும்தான்; இதனால, பல மாணவியரோட கல்வி தடைபடுது! 'என்னால் முடியும்'ங்கிற தன்னம்பிக்கையை, என்கிட்டே படிக்கிற காலங்கள்ல மாணவியருக்கு ஏற்படுத்திடுறேன். ஆனாலும், குடும்பச்சூழல் அவங்க மேற்படிப்பு ஆசையை அனுமதிக்கிறது இல்லை. இந்த சூழல் மாறணும்னா, இந்த பள்ளியோட நிலை உயர்த்தப்படணும்; இது என் பேராசை!

கல்வியாகும் கலை

பறையாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைகளை ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இலவசமா கற்றுத்தர பள்ளியில ஏற்பாடு பண்ணியிருக்கோம். இப்படி நாங்க உருவாக்குற 'பாரம்பரிய கலைக்குழு' பயிற்சிகளுக்கான செலவுகளை, ஆசிரியர்கள் நாங்களே ஏத்துக்கிறோம். இக்கலைகள் மூலமா தமிழ் மொழி, வரலாறு, நம்ம பாரம்பரியம் மேல மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுறதை என்னால உணர முடியுது!

நான் நம்புகிறேன்

கல்வி தவிர்த்து மனநலம், உடல்நலம், பண மேலாண்மை குறித்த புரிதல்கள் இந்தகாலத்து மாணவர்களுக்கு ரொம்ப அவசியம்னு நினைக்கிறேன். இதனால, தேர்ந்த நபர்கள் மூலமா வாரம் ஒருமுறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துறேன். 'ஒரு மொழி, தன்னம்பிக்கைக்கு தடையா இருக்கக்கூடாது'ங்கிறது என் எண்ணம்; இதனால, ஆங்கிலம் பேச மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறேன்.

வாசிப்பை ஊக்கப்படுத்த வகுப்புக்கு ஒரு நுாலகம் இருக்கு; ஆரோக்கியமான விவாதம் நடக்குது; ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்குறதா எனக்குள்ளே பெரும் நம்பிக்கை இருக்கு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us