தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/அக்கரை அதிசயம்

அக்கரை அதிசயம்

அக்கரை அதிசயம்


PUBLISHED ON : மார் 28, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 28, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வார்த்தை ஒன்றில் தன் வாழ்க்கையையே மாற்றிடும் வரம் கிடைத்தும் வேண்டாமென மறுத்து, கிடைத்த உதவியை மடை மாற்றி இயங்கும் ஜெயலட்சுமி தற்போது பிளஸ் 2 மாணவி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர் பெற்ற வரம் என்ன?

தனியார் நிறுவனம் நடத்திய தேர்வில் வென்று 'நாசா' செல்லும் வாய்ப்பு பெற்றிருந்த நேரம் அது. பயணச் செலவுக்கு போதுமான வசதி இல்லை. செய்தி பரவி உரிய தொகை திரண்ட நிலையில், ஒரு தொண்டு நிறுவனத்திடம் இருந்து அழைப்பு; 'உங்களுக்கு வீடு வேண்டுமா?' என்ற நிறுவனத்திடம் இவர் கேட்டது...

'அதுக்கு பதிலா எங்க கிராமத்து வீடுகளுக்கு கழிப்பறை கட்டித் தர முடியுமா?'

தற்போது, புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை கிராமத்தின் திருவள்ளூர் நகரில், சுமார் 26 லட்ச ரூபாய் மதிப்பில் 126 வீடுகள் கழிப்பறை வசதி பெற்றிருக்கின்றன.

உதவியை மறுக்குற அளவுக்கு உங்க குடும்பம் வசதியானதா ஜெயா?

(சிரிக்கிறார்) 'கஜா' புயல் கொண்டு போன வீட்டு கூரையை இன்னும் மாத்த முடியாம இருக்குறோம்!

குடும்பத்திற்கு வருமானம்?

பத்து ஆண்டுகளுக்கு முன்னால அப்பா விலகிட்டார். அம்மாவுக்கு மனநிலை சரியில்லை. தம்பி 9ம் வகுப்பு படிக்கிறான். இந்த சூழல்ல, பள்ளிக்கூடம் முடிஞ்சு வந்து முந்திரி பருப்பு சேகரிக்கிற வேலைக்கு போய் என் குடும்பத்தை நான்தான் கவனிச்சுக்கிறேன்.

தன் வாழ்க்கை சூழல் இப்படியிருந்தும் வீடு பெறும் வாய்ப்பை ஜெயலட்சுமி ஏன் நிராகரித்தார்; 'ஏன்னா... அந்த சந்தோஷம் எனக்கும், எங்க அம்மாவுக்கும், தம்பிக்கும் மட்டும்தான் கிடைச்சிருக்கும். இப்போ... ஊரே சந்தோஷமா இருக்குதே!' என்கிறார் பெருந்தன்மையோடு!மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்தி காண்பிப்பது ஜெயலட்சுமியின் குணம். படிப்பில் மட்டுமல்லாது பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளிலும் தன்னை நிரூபித்து வரும் இவர் மின்னிதழ் ஒன்றில் மாணவ ஆசிரியராகவும் பணியாற்றுகிறார். கடந்த பிப்ரவரியில் ராமேஸ்வரத்தில் இருந்து ஹீலியம் பலுான் மூலமாக செயற்கைகோள்களை அனுப்பிய மாணவர்களில் இவரும் ஒருவர்!

ஜெயலட்சுமியின் ஏக்கம்?

ஏதாவது ஒரு விஷயத்துல சாதிச்சு ஒவ்வொரு தடவை நான் மேடையேறும் போதும், அம்மாவும் - அப்பாவும் எதிர்ல உட்கார்ந்து கை தட்டலையேன்னு ஏங்குறேன். இந்த ஏக்கம் என் வாழ்நாள் முழுக்க இருக்கும். இந்த ஜென்மத்துல எனக்கு எழுதப்பட்ட விதி இது.

ஆசைகள் ஆயிரம்

* அம்மா நல்லபடியா குணமாகணும்!

* என் வருமானத்துல ஒரு வீடு கட்டணும்!

* தம்பி விரும்புறதை படிக்க வைக்கணும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us