தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/முதல்வர் பேசுகிறேன்!

முதல்வர் பேசுகிறேன்!

முதல்வர் பேசுகிறேன்!


PUBLISHED ON : ஜூலை 02, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 02, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'குடும்ப வன்முறை மாணவர்களோட கல்வியை பாதிக்குது'ன்னு இன்னும் எத்தனை நாளைக்கு சொல்லிட்டே இருக்கப் போறோம்; அந்த சூழலை எதிர்கொண்டு ஜெயிக்கிற தைரியத் தையும், தவறு செய்றவங்களுக்கு நியாயத்தை புரிய வைக்கிற பக்குவத் தையும் மாணவர்கள்கிட்டே செதுக்குறதுதானே ஆசிரியரோட கடமை!

என் கடமையை நான் பரிபூரணமா உணர்ந்திருக்கேன்; நான் ரா.நிஷா; சென்னை மின்ட் சாலை, கணேஷ்பாய் கலாடா ஜெயின் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை!

பழக தயங்காதே

நாலு பேரோட பேசிப் பழகுறது இன்றைய குழந்தைகளுக்கு ரொம்ப சிரமமா இருக்கு! ஆட்டோகாரங்ககிட்டே வழி கேட்கிறதையும், மளிகை கடை அண்ணாச்சிகிட்டே பொருட்கள் வாங்குறதையும் விரும்ப மாட்டேங்குறாங்க! 'மனிதன் ஒரு சமூக விலங்கு'ன்னு என் மாணவியருக்கு அன்றாடம் நினைவூட்டிட்டு இருக்குறேன்!

நெகிழிக்கு தடை

என் பள்ளி வளாகத்துக்குள்ளே எந்த வடிவத்துலேயும் நெகிழிகளுக்கு அனுமதி இல்லை! 'பிளாஸ்டிக் பாட்டில்கள் கூடாது'ன்னு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி இருக்குறேன். பிளாஸ்டிக் கழிவுகளால மண், கடல் ஆரோக்கியம் கெடுறது, கடல்வாழ் உயிர்களுக்கான பாதிப்புகள் பற்றி தொடர்ந்து வகுப்புகள்ல பேசுறேன்!

வெறுப்பு விஷம்

தோழியோட மதிப்பெண் குறைஞ்சதுக்காக கண்ணீர் விட்ட மாணவிக்கும் பாடம் எடுத்திருக்கேன்; இப்போ, சக மாணவியோட புத்தகப்பைக்கு இடம் தராத மாணவிக்கும் பாடம் நடத்துறேன்; இந்த வெறுப்புணர்வை வேரறுக்க பெற்றோரும் முன் வரணும்; 'என் குழந்தை மட்டுமே சிறப்பானது'ங்கிற எண்ணத்தை அவங்க துவைக்கணும்!

இனியும் மன்னிப்பேன்

ஒரு மாணவியோட 2,000 ரூபாய் காணாம போயிருச்சுன்னு புகார்; 'சிசிடிவி' பதிவுகளால கண்டுபிடிச்சிட்டேன். 'மோசமான குடும்ப சூழலால இந்த தப்பு பண்ணிட்டேன்'னு பணத்தை எடுத்த மாணவி அழ, அவளுக்கான தண்டனை 'மன்னிப்பு'ன்னு முடிவு பண்ணினேன்; அதுக்கப்புறம், ஒழுக்கத்தில் சிறந்த மாணவின்னா அவதான்!

தவறுகள் குற்றமல்ல

'நான் செஞ்சது தவறு'ன்னு ஒத்துக்க அனுமதிக்காத மனசு, செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேட்க விடாத மனசு, தனக்கு தேவையானது எதையும் தாழ்மையா கேட்டுப் பழகாத மனசு... இந்த மனசுல 'தலைமைப்பண்பு'ங்கிறது வளரவே வளராது! 'தவறுகளை ஒத்துக்கவும், திருத்திக்கவும் மாணவர்களை பழக்குங்க'ங்கிறது ஆசிரியர்களுக்கான என் அறிவுரை!

மீண்டும் பிறப்பேன்

ஓய்வுகாலம் நெருங்கிட்டு இருக்கு. ஓய்வுக்கு அப்புறம் நர்சரி பள்ளி துவக்கணும்னு ஆசை. குழந்தைகளோட இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் புதுசா பிறந்தமாதிரி உணர்ந்திருக்கேன். இந்த அனுபவம்தான் இந்த ஆசைக்கு காரணம். ஆமா... ஓய்வுக்கு அப்புறம் நான் புதுசா பிறக்கணும்னு விரும்புறேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us