தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண்பார்வை!

பெண்பார்வை!

பெண்பார்வை!


PUBLISHED ON : ஜூலை 09, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 09, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை, பாலமேடு; ஊர் முகப்பில் வரவேற்கும் விளம்பர பலகையில்... திமிறும் காளையின் திமில் பிடித்து அடக்கும் அரவிந்த்ராஜின் படம்; படத்திற்கு மேலே, 'ஜல்லிக்கட்டின் சரித்திர நாயகன்' பட்டம்!

இப்படி ஊரே மாவீரனாய் கொண்டாடும் அரவிந்த்ராஜின் தாயான 50 வயது தெய்வானையோ கலங்கி நிற்கிறார். காரணம்...

'பொங்கல் ஜல்லிக்கட்டு முடிஞ்சதுமே அவனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிரணும்னு ஆசைப்பட்டேன். 'என் வீரத்தை விரும்பி கழுத்தை நீட்டுற பொண்ணுக்கு நான் காளைகளை அடக்கி ஜெயிச்ச தங்க காசுல தாலி செஞ்சு போடப் போறேன்'னு அவனும் ஆசையோட இருந்தான். நான் வாழ்க்கையில தொலைச்ச சந்தோஷத்தை அவன் கல்யாணம் தந்திரும்னு நம்பினேன்; ஆனா, எல்லா கனவும் கலைஞ்சிருச்சு!' - இதற்குமேல் தெய்வானையால் கண்ணீரை அடக்க முடியவில்லை!

கடந்த தைப்பொங்கல் நாளில் பாலமேடு ஜல்லிக்கட்டு திடலில் ஒன்பது காளைகளை அடக்கி நான்காவது சுற்றின் முடிவில் மூன்றாவது இடம் பிடித்த 24 வயது அரவிந்த்ராஜ், முதல் பரிசான காரை ஜெயிக்கும் வேகத்தில் முன்னேறிச் செல்ல, 5வது சுற்றில் கறுப்புக்கோவில் காளை அவரை சந்தித்தது.

காளையின் மூர்க்கத்தில் இவரது வேகம் சிதைய களத்திலேயே மரணம்!

'வீரனோட தாய்' - இந்த அடையாளம் சோகம் துடைக்கலையா?

இந்த கவுரவம் என் பிள்ளையோட குரல் கேட்க வைக்குமா; இல்ல... அவனை என்கிட்டே கொண்டு வந்து நிறுத்துமா; 'தெய்வானை மகன் காளையை அடக்கிட்டான்'னு ஒலிப்பெருக்கியில அறிவிப்பு வர்றப்போ எல்லாம் 'பிள்ளை உசுருக்கு எதுவும் ஆயிடக்கூடாது கடவுளே'ன்னு பதறுவேன். அந்த கடவுளுக்கு என் குரல் கேட்கலை!

இன்னைக்கு, அவன்கூட சேர்ந்த இளந்தாரி பயலுகளை பார்க்குறப்போ எல்லாம், 'என் வலி உங்க தாய் தகப்பனுக்கு வேண்டாம்யா'ன்னு கதறுறேன்! நான் கேட்குறது ஒரே கேள்விதான்... இந்த விளையாட்டுல கலந்துக்காதவன் வீரன் இல்லையா; இந்தா... இந்த அத்தனையும் என் பிள்ளைக்கு ஈடாகுமா?

தெய்வானை கைகாட்டிய இடத்தில் பீரோ, கட்டில், பித்தளை அண்டா, சூட்கேஸ், புடவைகள், நாற்காலிகள் என காளையை அடக்கி அரவிந்த்ராஜ் பெற்ற பொருட்கள் குவிந்து கிடக்கின்றன!

அரவிந்த்ராஜ் இல்லாத இந்த நாட்கள்...

கட்டட வேலை, ஜல்லி/ மணல் லோடு ஏற்றி இறக்குறதுன்னு கடுமையா உழைச்சவன் அவன். அவன் முதன்முதலா சம்பாதிச்ச 600 ரூபாய், கோடி ரூபாய்க்கு சமம். இன்னைக்கு அவன் போனதுக்கு அப்புறம் ஆறுதல் சொல்லி நிறைய உதவிகள் கிடைச்சாலும் எதுவும் அவன் சம்பாதிச்சது இல்லையே!

என் கணவர் கைவிட்டப்போ கூட என் வாழ்க்கை என்கிட்டே இருந்தது; இப்போ, எல்லாமே தொலைஞ்சு போயிட்ட மாதிரி இருக்கு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us