தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/முதல்வர் பேசுகிறேன்!

முதல்வர் பேசுகிறேன்!

முதல்வர் பேசுகிறேன்!


PUBLISHED ON : அக் 13, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 13, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வணக்கம். நான் சுதா. திருவண்ணா மலை மாவட்டம் போளூர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசி ரியை; 20 ஆண்டுகால கற்பித்தல் அனுபவத்துடன் ஒன்றரை ஆண்டு காலமாக இப்பொறுப்பில் இருக்கிறேன்.

எனது பள்ளிக்காலம்

படிப்பு ஒருபக்கம், பேச்சு போட்டி, விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வம் ஒருபக்கம் என, எல்லா களங்களிலும் இளம் வயதில் பயிற்சி எடுத்துள்ளேன். இந்த அனுபவத்தில்தான், எனது தலைமையின் கீழ் பயிலும் 1,860 மாணவியரின் பன்முகத்திறனை மேம்படுத்தி வருகிறேன்!

மனபலம் அவசியம்

இப்பள்ளியில் நான் பொறுப்பேற்றதும் முதலில் நான் ஆய்வு செய்த இடம்... மாணவியர் பயன்படுத்தும் கழிப்பறை! பெரும் பிரச்னையாக இருந்த 'நாப்கின்' கழிவுகளை முறையான திட்டமிடலோடு அகற்றினேன்; இதனால், மாணவியரிடம் மனச்சோர்வு நீங்கியதை உணர்ந்தேன். மனதை வலுவாக்க பாடங்கள் தாண்டிய வாசிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன்!

பெண்ணுக்கு கல்வி

மாணவியரின் இடைநிற்றல் புள்ளி விபரங்களை கல்வித்துறைக்கு சமர்ப்பிப்பதுடன் என் கடமை முடிவதில்லை. அப்பட்டியலுடன் மலைக்கிராமங்களுக்கு பயணப்பட்டு, 'உரிய காலத்தில் பெற வேண்டிய கல்வியை பெறாமல், பின் எவ்வளவு வருந்தினாலும் வீண்' என்று பெற்றோருக்கு புரிய வைக்கிறேன். 'பெண் குழந்தைக்கு கல்வியே பாதுகாப்பு' என்பதை உணர்த்துகிறேன்!

உன் வேலை உன் பொறுப்பு

எந்த ஒரு சூழலிலும் என் சக ஆசிரியர்களுக்கு நான் உத்தரவிடுவதில்லை. ஒரு பணியில் அவர்களுடைய பங்கு; அதனால் மாணவியருக்கும் பள்ளிக்கும் கிடைக்கவிருக்கும் பலன் இவற்றை மட்டுமே உணர்த்துகிறேன். எனது இந்த அணுகுமுறை என் பள்ளி மாணவியரின் பல வெற்றிகளுக்கு காரணமாகி இருப்பதை கண்கூடாக உணர்கிறேன்!

மனம் எனும் தோழி

'முடிவெடுக்கும் திறனை நம் மூளை 18 வயதிற்கு பிறகே எட்டுகிறது என்பதால்தான், வாக்களிக்கும் உரிமை உட்பட பல அரசு அங்கீகாரங்கள் 18 வயது பூர்த்தி ஆனதும் கிடைக்கின்றன' எனும் உண்மையைச் சொல்லி, பருவ வயது மாணவியரின் மனதை பண்படுத்துகிறேன். 'ஜன்னல் அடைத்து புழுங்காமல் மனப்பக்குவத்துடன் காற்றை உணருங்கள்' என்று அறிவுறுத்துகிறேன்!

எனக்குள் ஓர் ஆசை

எங்கள் பள்ளியில் பயிலும் ஜமுனாமரத்துார் மலைவாழ் மாணவியருக்கு சரளமாக ஆங்கிலம் பேச வருகிறது. தடகள பயிற்சிகளில் அவர்கள் தீவிரம் காட்டுகின்றனர். கல்வியின் மீதான அவர்களது ஈடுபாட்டை பார்க்கையில், 'மலைக்கிராம பள்ளியில் தலைமை ஆசிரியை ஆக பொறுப்பேற்க வேண்டும்' எனும் விருப்பம் எனக்குள் துளிர்த்திருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us