PUBLISHED ON : ஜூன் 15, 2020

செவிலியருக்கு திரும்பும் திசையெங்கும் புகழ் மாலைகள் அணிவகுத்து நிற்கின்றன; ஆனால் அவற்றையெல்லாம் ஏற்கும் மனநிலையில் அவர்கள் இல்லை என்பதே யதார்த்த நிலை. இவ்வகையில் சமூகம், குடும்பத்தோடு தன்னையும் தற்காத்து, 57 வயதில் 'கொரோனா' யுத்தத்தில் வாள் சுழற்றி வருகிறார் சகுந்தலா; சேலம் மாவட்டம், ஓமலுார் அரசு மருத்துவமனையின் தலைமை செவிலி!
பணி துவக்கம்: 1994ம் ஆண்டு
முதல் களம்: பொறையாறு அரசு மருத்துவமனை, நாகப்பட்டினம்.
பதவி: செவிலி
துறை அனுபவம்: 26 ஆண்டுகள்
வாடிக்கையான வாழ்க்கை
அதிகாலை 5:00 மணிக்கு முழிப்பு வந்திடும். கொஞ்ச நேரம் பிரார்த்தனை... அப்புறம் சமையல் வேலை. 7:00 மணிக்கு வீட்ல இருந்து கிளம்பினா அடுத்த அரை மணி நேரத்துல மருத்துவமனை. மதியம் 2:00 மணிக்கு பணி நேரம் முடிஞ்சிட்டாலும் கிளம்புறதுக்கு 3:00 மணி ஆயிடும்; இந்த கொரோனா நேரத்துல 6:00 மணி கூட ஆயிடுது. மத்தவங்க பார்வைக்கு வேணுமின்னா இது இயந்திர வாழ்க்கையா இருக்கலாம்; ஆனா, சக மனிதனோட ரத்தத்தோடும் சதையோடும் தொடர்புல இருக்குற வாழ்க்கை இது!
'கொரோனா'விற்குப் பின், பணி சார்ந்து மனதளவில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்?
போர்க்களத்துல ஒரு செவிலியோட பணி என்னவாக இருக்குமோ அதுதான் இந்த கொரோனா காலத்துல என்னோட பணி! என்ன ஒண்ணு... போர்க்களத்துல செவிலியர் மேல தாக்குதல் இருக்காது; ஆனா, இங்கே அதற்கான சூழல் இருக்கு. ஒருவேளை அப்படி நான் தாக்குதலுக்கு உள்ளானா என் குடும்பமும் சேர்ந்தே பாதிக்கப்படும். அதனால மனசுல அதீத எச்சரிக்கை உணர்வோட இருக்குறேன். இந்தசமயத்துல, என்னோட சேவை அவசியம்ங்கிறதை உணர்ந்து முழு மனசோட பணியில ஈடுபடுறேன்.
'நாளை' என்பது...
செவிலியர் பணிக்குன்னு ஒரு மனசு இருக்கு. அது... 'நாளை'யை நிச்சயமில்லாததா நினைக்க வைக்காது. என்னை பொறுத்தவரை, 'நாளை'ங்கிறது நம்பிக்கை. எல்லா நோயாளிகளுக்கும் இந்த மருந்தையும் சேர்த்துதான் நான் கொடுத்துட்டு வர்றேன்.
'கொரோனா' சூழல் காரணமா அக்கம்பக்கத்துல இருக்குறவங்க...
ஆமா... முன்ன மாதிரி யாரும் நெருங்கிப் பேசுறதில்லை; ஆனா, இதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஒருசிலர் நெருங்கி வந்தாக்கூட, நான் விலகி நின்னுதான் பதில் சொல்றேன். கூடவே, கடமையை உணர்ந்து பாதுகாப்பு ஆலோசனைகளையும் சொல்லிட்டு வர்றேன்.
சுருக்
'தாய்மை உணர்வோட செவிலியர் எல்லாரும் பணி செய்யணும்'னு நினைக்கிற மனசு, தாய்க்குரிய மதிப்பை செவிலியருக்கு தருதா?
