தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/அன்புள்ள சிஸ்டர்

அன்புள்ள சிஸ்டர்

அன்புள்ள சிஸ்டர்


PUBLISHED ON : ஆக 06, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 06, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நிழலின் அருமை வெயிலில் தெரியும்' என்பார்கள். உண்மையில்... வெயிலில் நாம் உணர வேண்டியது நிழலின் அருமையை அல்ல... மரத்தின் அருமையை! மரமின்றி நிழல் ஏது; இவ்வகையில், நிழல் தரும் மரம்... சுசீலா; சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தும்பல் கிராமத்தின் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்பசுகாதார நிலையத்தின் செவிலி.

பணி துவக்கம்: 1990ம் ஆண்டு

முதல் களம்: காஞ்சி காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை மருத்துவமனை, சென்னை.

பதவி: செவிலிதுறை

அனுபவம்: 30 ஆண்டுகள்.

யான் பெற்ற இன்பம்...

'வயசு 50 ஆகுது. இதுவரைக்கும், 10 ஆயிரம் சிசுக்களை கையில ஏந்தியிருப்பேன். பிள்ளையை துாக்கிட்டுப் போய் பெத்தவங்ககிட்டே காட்டும் போது, அவங்க கண்கள்ல ஒரு பரவசத்தை பார்ப்பேன் பாருங்க... ஆஹா... அது வார்த்தையில சொல்ல முடியாத பேரின்பம்!

'கொரோனா' ரொம்ப பயமுறுத்துதா?

'நான் பயப்படவே இல்லை'ன்னு சொல்ல மாட்டேன். ஆனா, யாரும் எனக்கு தைரியம் சொல்லலை; நானே கூட என்னை இதுக்கு உட்படுத்திக்கலை. என்னை அறியாமலே நாலைஞ்சு நாள்ல பயத்துல இருந்து வெளியே வந்து, ஒரு தானியங்கி இயந்திரம் மாதிரி களத்துல இறங்கிட்டேன்.

பெருநகரம் சென்னை - மலை கிராமம் தும்பல்; எந்த பணியிடம் மனசுக்கு நெருக்கமா இருக்கு?

சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு வர்றவங்களுக்கு மகப்பேறு சார்ந்த விழிப்புணர்வு இருக்கும்; தும்பல்ல அது கிடையாது. அதேநேரத்துல, தும்பல்ல நாம சொல்றதை காது கொடுத்து கேட்பாங்க! மாவட்ட தலைமை மருத்துவமனைகளை காட்டிலும், இந்தமாதிரி ஆரம்ப சுகாதார நிலையங்கள்ல பணி செய்றது ரொம்பவே திருப்தியா இருக்கு. ஏன்னா... இங்கே சவால்கள் அதிகம்!

ஆழ்ந்த அனுபவத்துல சொல்லுங்க... குழந்தையின் அழகு எதில்?

அழுகை; அந்த அழகை தரிசிக்கத்தான் காத்துக் கிடப்பேன். பிறந்த குழந்தை அழுதவுடனேதான் என் முகத்துல சிரிப்பு வரும்.

நோயாளி - மருத்துவர் - செவிலி; இந்த உறவுச்சங்கிலி பற்றி...?

நோயாளிக்கு மருத்துவர் மேல இருக்கிறது பக்தி; எங்க மேல இருக்கிறது அன்பு. துயரத்துல தவிக்குற மனசு அன்பைத்தான் தேடும்; அந்த தேடலுக்கான விடை... செவிலி. பல நோயாளிகளோட கவலைகளுக்கும் கண்ணீருக்கும் எங்க ஆறுதல் வார்த்தைகள்தான் மருந்து.

சுருக்!

சக மனுஷனோட துயரத்துல பங்கெடுத்துக்கிறது சடங்கா மாறிட்டு வருதே; இது... நல்லதுக்கா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us