தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/முதல்வர் பேசுகிறார்

முதல்வர் பேசுகிறார்

முதல்வர் பேசுகிறார்


PUBLISHED ON : ஆக 12, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 12, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பள்ளியின் கடைநிலை பணியாளரா துவங்கி முதல்வர் பணி வரை, 30 ஆண்டு அனுபவம்! வெறும், 16 மாணவர்களோட இயங்கிட்டு இருந்த ஒரு பள்ளியை, 2,500 மாணவர்களோட மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தினதுல எனக்கு பெரும் திருப்தி.

'இந்த பணியை, கடந்த நான்கு ஆண்டுகளா நான் முதல்வரா இருக்குற ராமநாதபுரம், ஹிந்து வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியிலும் நிகழ்த்தி காட்டணும்ங்கிறது ஆசை!' - சாந்தி ஜெயக்குமார்.

முதல்வர் கிரீடம்

மாணவர்களை வழி நடத்துற புனிதமான பணி ஆசிரியர்களுக்கு; அந்த ஆசிரியர்களை வழி நடத்துற பெரும் பணி முதல்வருக்கு; அதனால, என்னைப் பொறுத்தவரைக்கும் முதல்வர் பணிங்கிறது கிரீடம் இல்ல... பொறுப்பு!

என் புரிதல்

தலைமை பதவியில இருக்குறவங்களுக்கு மனசை கட்டுப்படுத்துற வித்தை தெரிஞ்சிருக்கணும். அர்ப்பணிப்புள்ள நம்ம பணிக்கு கிடைக்கிற அங்கீகாரம், பணி தர்ற அழுத்தம், எதிர்பாராம சந்திக்கிற தோல்வி... இதுல எது வேணும்னாலும் மனசை அசைச்சுப் பார்க்கும். அந்தசமயத்துல, மனசு இழுத்த பக்கம் போயிட்டா காலத்துக்கும் நாம அடிமைதான்!

பெற்றோரே...

'எப்படியாவது பிள்ளையை படிக்க வைச்சிடணும்'னு நினைக்கிற பெற்றோருக்கு ஒரு கேள்வி; குழந்தைக்கு கல்வியறிவு வழங்குறது உங்களை பொறுத்தவரை கடமையா அல்லது முதலீடா; இதுல நீங்க இரண்டாமவர்னா, உங்க குழந்தையை நினைச்சு வருத்தப்படுறேன்.

ஆசிரியர்களே...

பொது சமூகம் ஆசிரியர்களை சராசரி மனிதர்களுக்கும் ஒருபடி மேல வைச்சுதான் பார்க்குது. அதனாலதான், பேருந்து பயணத்துல கூட, 'நீங்க உட்காருங்க டீச்சர்'ங்கிற மரியாதை கிடைக்குது. இந்த கவுரவத்துக்கு, 100 சதவீதம் தகுதியுடைய நபரா நாம இருக்குறோமா?

நான் விரும்பும் மாற்றம்

மனிதம் குறைஞ்சுட்டு வர்றதை பயணங்கள் அப்பட்டமா காட்டுது; ஆமா... சாலைக்கு வந்துட்டாலே, சக மனிதன் போட்டியாளரா ஆயிடுறானே; அசம்பாவிதம் நடந்துட்டா, முதல்ல குரல் உயர்த்தி பேசுறவன் நியாயவான்! ச்சே... இந்த மன அழுக்கை நாம முதல்ல கழுவி ஆகணும்.

என் பரிந்துரை

செய்தித்தாள், 'டிவி' கடந்தும் மக்களை புரிஞ்சுக்க முயற்சி பண்றேன். இதனால 'கொரோனா' காலத்துக்கு முன்னும், இனிமேலும் நகர பேருந்துலதான் என் அன்றாட பயணம். நீங்களும் இந்த அனுபவத்துக்கு ஏன் முயற்சி செய்யக்கூடாது?

என் நம்பிக்கை

'ராமநாதபுரம்'ன்னாலே 'பின்தங்கிய மாவட்டம்'னு சொல்றாங்க. கல்வியறிவால இந்த கறை மறையும்; அதுல, என் பங்கு நிச்சயம் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us