தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/அன்புள்ள சிஸ்டர்!

அன்புள்ள சிஸ்டர்!

அன்புள்ள சிஸ்டர்!


PUBLISHED ON : செப் 03, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப.தாரகேஸ்வரிக்கு மனித முகங்களை நேருக்கு நேர் பார்த்து 'பையன்/பொண்ணு பொறந்திருக்கு' எனக்கூறிய அனுபவமும் உண்டு; உயிர் பிரிந்ததை அறிவிக்கும் தெம்பின்றி கையறு நிலையில் நின்ற அனுபவமும் உண்டு. தற்போது, கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை செவிலியாக, 50வது வயதில் மேலும் அனுபவம் பெற்று வருகிறார்.

பணி துவக்கம்: 1992ம் ஆண்டு

முதல் களம்: தனியார் நர்சிங் ஹோம், கோவை

பதவி: செவிலி

துறை அனுபவம்: 29 ஆண்டுகள்

பத்து வயது சபதம்

ஆட்டோ ஓட்டுனரா இருந்த அப்பாவை இதய பிரச்னை காரணமா மருத்துவமனையில சேர்த்திருந்தோம். சோர்வா இருக்குற அப்பா செவிலியர் வந்து ஆறுதல் சொன்னதும் புத்துணர்ச்சி ஆயிடுவாரு. பெற்ற தகப்பனை கவனிச்சுக்கிற மாதிரி அவங்க அவரை கவனிச்சுக்கிட்டாங்க! எங்க வீட்ல அம்மா, நாங்க ஆறு பொண்ணுங்க, ஒரு பையன்னு அப்பாவை நம்பியிருந்தோம்; மருத்துவரையும், செவிலியரையும் அவர் நம்பியிருந்தார்.

'டிஸ்சார்ஜ்' அன்னைக்கு செவிலியரைப் பார்த்து எங்கப்பா கைகூப்பி வணங்கினார். 'செவிலி ஆகணும்'னு அந்த தருணத்துலதான் நான் முடிவு பண்ணினேன்.

உங்கள் அனுபவத்தில் மனிதர்கள்?

அவசரக்காரர்கள், முன் தீர்மானத்தால் பிறரை காயப்படுத்துபவர்கள், 'தனக்கு எதுவும் ஆகாது' எனும் மிதப்பில் வாழ்க்கையை பாழாக்குபவர்கள், 'தனக்கு ஏதாவது ஆகி விடுமோ' எனும் தவிப்பில் வாழ்க்கையை வீணாக்குபவர்கள், இறுதிகட்டத்தில் தவறுகளை திருத்த வாய்ப்பு கேட்பவர்கள்... சுருக்கமா சொல்லணும்னா, ஆடுற வரைக்கும் நல்லா ஆடிட்டு அடங்கிப் போறவங்கதான் மனிதர்கள்!

இளைய மகனுக்கு...

பணிச்சுமை காரணமா இரண்டாவது குழந்தை வேண்டாம்னு நினைச்சிருந்தேன். 'இல்லம்மா... குழந்தையை வளர்க்க என் வேலையை நான் விடுறேன்'னு உங்க அப்பா ஆதரவு தந்தார்.

பணிச் சூழலால உன் கூட நிறைய நேரம் என்னால இருக்க முடியலைங்கிற வருத்தம் எனக்குண்டு. இந்த சீருடை என் பத்து வயது கனவு, ஆசை!

எதிர்காலத்துல உனக்கும் இப்படியான கனவுகளும், ஆசைகளும் வரும். அதுக்காக சில விஷயங்களை நீ தியாகம் பண்ண வேண்டியிருக்கும்... உன் அண்ணன் நம்மை எல்லாம் பிரிஞ்சு ரஷ்யாவுல மருத்துவம் படிச்ச மாதிரி! தம்பி... நீ என்னை மிஸ் பண்ற மாதிரியே அம்மாவும் உன்னை மிஸ் பண்றேன்டா!

'கொரோனா' - ஒரு உண்மை சொல்லுங்க?

ஈரம் சுண்டிப்போன நிலம் மாதிரி ஆயிடுச்சு மனித வாழ்க்கை.



'சுருக்'


ரத்தத்தையும், சீழையும் அன்றாடம் தொட்டுத் துடைக்கிற எங்களை ஒதுக்க 'கொரோனா'வை காரணம் காட்டுது இந்த சமூகம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us