தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/நங்கையர் திலகம்!

நங்கையர் திலகம்!

நங்கையர் திலகம்!


PUBLISHED ON : ஆக 24, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 24, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தினமலர், 'புதுப்பயணம் - இப்படியும் சில மனிதர்கள்' பகுதி பரிச்சயம் உள்ளவர்களுக்கு சென்னை, ஆயிரம் விளக்கு பத்மா அம்மாவை நன்கு தெரியும். மரபணு பிரச்னைகளால் செவி, விழி, பேச்சு மற்றும் நடமாடும் திறனை இழந்த இரு மகன்களின் தாய்.

'கடவுளே... நான் உயிரோடு இருக்கும்போதே என் புள்ளைங்க வாழ்க்கை முடிஞ்சிரணும்!' - இதுதான் 2016ல் நம்மை சாட்சியாக வைத்து கடவுளிடம் அவர் வேண்டிக் கொண்டது! இன்று, வடபழனியில் இருக்கிறார் பத்மா அம்மா.

நலமா இருக்கீங்களாம்மா?

பெரிய சுமையை இறக்கி வைச்ச உணர்வுல இருக்குறேன். இனிமே தலையணை நனைக்கிற என் கண்ணீர்ல விரக்தி இருக்காது! ஆமா... 19 மாதங்களுக்கு முன்னால மூத்தவனையும், இந்த ஜூலை மாதம் இளையவனையும் கடவுள் அழைச்சுக்கிட்டார்; என் வேண்டுதல் நிறைவேறிடுச்சு!

இப்படி ஒரு வேண்டுதலுக்கு எப்படி துணிஞ்சீங்க?

'அப்பாவுக்காகவும், சித்தப்பாவுக்காகவும் பாட்டி இப்படி வேண்டுறாங்களே'ன்னு என் பேத்திகளுக்கு ரொம்ப வருத்தம். எனக்கும் வலி இருக்கு; ஆனா, எங்களைவிட அதிகம் அவதிப்பட்டது என் பசங்க! ஒரு அம்மாவா என் பிள்ளைகளுக்கு மரணம்தான் விடுதலைன்னு நான் உணர்ந்தேன்; இப்போ ராஜகோபாலும், கிரியும் நிச்சயம் நிம்மதியா இருப்பாங்க!

அவங்க மரணம் உங்க வாழ்க்கையில தந்திருக்கிற மாற்றம்?

எதுவும் இல்லை! மூத்த பேத்தியை பட்டப் படிப்பு படிக்க வைச்சு, நல்ல இடத்துல திருமணம் செஞ்சு கொடுத்திருக்கேன். இப்ப வேலைக்குப் போய் சம்பாதிக்குற பணத்துல கொஞ்சம் எனக்கும், காலேஜ் போற அவ தங்கைக்கும் கொடுக்குறா. என் பயணத்துல எந்த தடங்கலும் இல்லை; 'சோகம்'ங்கிற முகமூடியை போட்டுக்கிட்டு 'வாழ்க்கை தேங்கிடுச்சு'ன்னு சொல்றதுல எனக்கு உடன்பாடு இல்லை!

'நஷ்டம், சுமை, ஏமாற்றம்'னு மனித மனசு அல்லாடுதேம்மா?

நிற்க முடியாம சரியுற என் மகன்களை தாங்கிப் பிடிக்க என் உடம்புல தெம்பு இல்லாத நேரங்கள்; மூச்சு விட சிரமப்படுற அவங்களைப் பார்த்து துாங்காம இருந்த இரவுகள்; 54, 48 வயசு பசங்களை தினசரி கழிப்பறைக்கு அழைச்சுட்டுப் போய் வந்த தருணங்கள்; என் நிலைமை தெரிஞ்சும், 'வீட்டை காலி பண்ணுங்க'ன்னு வீட்டு உரிமையாளர் சொன்ன நிமிஷம்... 'நம்ம துயரம்தான் பெருசு'ன்னு நானும் நினைச்சிருக்கேன்; ஆனா, எல்லாமும் கடந்து போகும்!

கடவுள் இருக்குறாராம்மா?

என் பசங்க பிரச்னைக்கான நிரந்தர தீர்வு மருத்துவத்துல இப்போவரைக்கும் இல்லை! இறுதி நாட்கள்ல அவங்களை வைச்சு மருத்துவர்கள் சில ஆய்வுகள் பண்ணினாங்க; ஒருவேளை எதிர்காலத்துல இந்த நோய்க்கு நிரந்தர மருந்து கிடைச்சா... அதுவும் கடவுள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us