தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/முதல்வர் பேசுகிறார்!

முதல்வர் பேசுகிறார்!

முதல்வர் பேசுகிறார்!


PUBLISHED ON : ஆக 19, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வணக்கம்... நான் சே.புவனேஸ்வரி. 'பிளஸ் 2வில் 100 சதவீதம் தேர்ச்சி' - இந்த பழத்தை ருசிக்காமலேயே இருந்த கோவை, வடசித்துார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 2018 - 19ம் கல்வி ஆண்டுல அந்த இனிப்பான வாய்ப்பு கிடைச்சது. தலைமை ஆசிரியையா அதுக்கு நானும் ஒரு காரணமா இருந்தது, என் 21 ஆண்டு கால கல்விப் பணியில மிகச்சிறந்த தருணம்!

அறிவே ஆற்றல்

'தாவரவியல் ஆசிரியை'ங்கிற முறையில இயற்கையோட பிரம்மாண்டத்தை மாணவர்களுக்கு கடத்துறது என் கடமை. என் பள்ளியோட பெரும்பான்மை மாணவர்கள் 'முதல் தலைமுறை பட்டதாரி ஆகணும்'ங்கிற கனவோட வர்றவங்க; உயர்கல்வியில அடிப்படை தெரியாம அவங்க திணறக் கூடாதுன்னு, 'மதிப்பெண்களுக்காக இல்லாம, அறிவை வளர்த்துக்குறதுக்காக அறிவியல் படிங்க'ன்னு உணர்த்துறேன்!

வேர்

மாணவ, மாணவியரோட கல்வித்திறன் மேம்பாடு மட்டுமே என் நோக்கம் கிடையாது! மனைவியை விட்டுட்டு வேறொரு பெண்ணோடு போன தந்தையின் பிள்ளைகிட்டே, 'படி... படி'ன்னு சொல்றது உளவியல் வன்முறை. அந்த பிள்ளையோட மனசுக்கு மதிப்பு கொடுத்து, காயத்துல இருந்து மீண்டு வர்றதுக்கான அவகாசமும், ஆலோசனையும் தர்றது என் குணம். மாணவச் செடிகளின் கிளைகளை பராமரிக்கிறது ஆசிரியர்கள்னா, வேர்களுக்கு பொறுப்பு நான்!

என் பாதை

சில ஆசிரியர்கள் அக்கறையோட வேலை பார்ப்பாங்க; சிலர் கடமைக்காக பணி செய்வாங்க; இன்னும் சிலர் வேலையே செய்ய மாட்டாங்க! இந்த கடைசி தரப்போட மல்லுக்கட்டி என் நேரத்தை நான் வீணாக்குறதில்லை! ஏன்னா... நான் பாடம் எடுக்க வந்தது மாணவர்களுக்குத் தானே தவிர ஆசிரியர்களுக்கு இல்லை!

பெற்றால் மட்டும்...

ஒரு ஆசிரியையா, 12 - 17 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு, 'காதல்'னு அவங்க நினைக்கிற மாயவலையோட உண்மையான முகத்தை புரிய வைக்கிறேன். பிள்ளைகள்கிட்டே மனசு விட்டு பேசாத பெற்றோரும், கண்மூடித்தனமா அன்பு காட்டுற பெற்றோரும் உள்ள வீடுகள்லதான் இந்த பிரச்னை அதிகமா இருக்கு! பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மனசை படிக்கத் தெரிஞ்சிருக்கணும்!

மாற்றம் வரணும்

'அரசுப் பள்ளின்னாலே அது ஏழைப் பிள்ளைகளின் இடம்'ங்கிற நிலைமை மாறி 'திறமையாளர்களின் உற்பத்திக் கூடம்'னு சமூகம் உணரணும்; இந்த மாற்றம் ஆசிரியர்களால மட்டும்தான் சாத்தியம்!

திறமைக்கு சவால்

ஊரடங்குல தளர்வு கிடைச்சப்போ, ஆசிரியர்கள் துணையோட மாணவ, மாணவியர் வீட்டிற்கே போய் உற்சாகப்படுத்தினேன். இந்த 'கொரோனா' காலம் ஆசிரியர் - மாணவர் திறமைகளுக்கு பெரும் சவால் தந்திருக்கு; நிச்சயம் இதுல நாங்க ஜெயிப்போம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us