தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!


PUBLISHED ON : ஆக 13, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 13, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாய் லதாவால் மட்டுமே வளர்க்கப்படும் திருப்பூரைச் சேர்ந்த 21 வயது கல்லுாரி மாணவி விஜய சரஸ்வதிக்கு துணிச்சல் ரொம்பவே அதிகம்!

'அம்மா, மகள்' - இந்த குட்டி உலகம் சந்தோஷம் தருதா சரஸ்வதி?

மனசுக்கு நிறைவா இருக்கு! எப்படின்னு கேட்டீங்கன்னா... ம்ம்ம்... நான் எது கேட்டாலும், நீ இதை செஞ்சாத்தான் அது கிடைக்கும்னு சொல்லியே அம்மா வளர்த்ததால எங்க உலகத்துல பொருட்களுக்கு மதிப்பு அதிகம். உயிரற்ற பொருட்களுக்கு மதிப்பு தர்ற ரெண்டு மனசு, உயிருள்ள உறவுகளை எப்படி கையாளும்னு நீங்களே புரிஞ்சுக்கோங்க!

மாநகராட்சி மருத்துவமனையில் 28 ஆண்டு கால செவிலி பணி அனுபவம் கொண்ட இவரது தாய் லதா, நிலைய மருத்துவர் மீது சில குற்றச்சாட்டுகளை சொல்லியதால் பணியிடை நீக்கம் மற்றும் பணியிட மாற்றத்தை சந்தித்திருக்கிறார். இதய நோயாளியான அம்மாவின் துயரங்களை காணச் சகியாமல் சமூக வலைதளத்தில் காணொளி வெளியிட்டு அதிகாரவர்க்கத்திடமும், மக்களிடமும் நியாயம் கேட்டவர் இந்த விஜய சரஸ்வதி.

இந்த துணிச்சல் எப்படி?

கூடவே பிறந்திருக்குன்னு நம்புறேன்! 'என் வேலைக்கு உலை வைச்சிடாதேடி'ன்னு அம்மா பதறுனாங்க. 'நியாயத்தைதானே கேட்குறேன்'னு அம்மாவை சமாதானப்படுத்தினேன்.

சமீபத்துல பதிவுத் திருமணம் பண்ணின நண்பர்கிட்டே, 'உன்னை நம்பி வந்த பொண்ணுக்கு ஆதரவா நான் வந்திருப்பேனே'ன்னு உரிமையா கோபப்பட்டேன்.

துணிச்சல்... என் அடையாளம்!

உண்மைதான்; சில ஆண்டுகளுக்கு முன் விபத்தொன்றில் லதாவின் கை முறிந்தபோதும், கடந்த ஆண்டு பிப்ரவரியின் நள்ளிரவொன்றில் லதாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்ட போதும் அந்த சூழல்களை திடமாக கையாண்டிருக்கிறார் சரஸ்வதி. தாய்க்கு நெஞ்சு வலி ஏற்பட்ட அந்த இரவில், வாழ்விடமான நாதம்பாளையம் கிராமத்தில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள திருப்பூருக்கு ஆள் அரவமற்ற பாதையில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பயணித்திருக்கிறார்.

அம்மா சொல்லுக்கு மறுபேச்சு உண்டா?

நியாயமான காரணங்களுக்கு மறுபேச்சு கட்டாயம் உண்டு! ஆனா, 'அப்பா ஆதரவில்லாம வளர்ற பொண்ணு நீ; வெளி உலகம் தவறா பேச நாமே இடம் கொடுத்துடக் கூடாது'ன்னு அம்மா சொல்லிட்டா கப்சிப்!

இதய பிரச்னைக்கான சிகிச்சை முடிந்து நீண்ட ஓய்விலிருந்த இவரது தாய் லதா சமீபத்தில் மருத்துவ சேவைப் பணியில் மீண்டும் இணைந்திருக்கிறார். இதில் மகிழ்ச்சி கண்டிருக்கும் சரஸ்வதிக்கு, அதிகாரவர்க்கத்திடம் நியாயம் கேட்ட இவரது காணொளி எந்த ஒரு பலனையும் தரவில்லை என்பதில் சற்று வருத்தம்!

உங்க கனவு என்ன?

உளவியல், சட்டம் படிக்கணும்னு ஆசை; 'ஊர் தலைவி ஆகணும்'னு பேராசை.

ச.ல.விஜய சரஸ்வதியின் புதுப்புது அர்த்தங்கள்!

அம்மா - சாவி

தயக்கம் - நோய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us