தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/வறுமையை 'பிழியும்' தன்னம்பிக்கை...

வறுமையை 'பிழியும்' தன்னம்பிக்கை...

வறுமையை 'பிழியும்' தன்னம்பிக்கை...


PUBLISHED ON : ஆக 09, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவிநாசியில், ரங்கா நகர் பக்கம், புளிய மரத்துக்கு கீழ் இருக்கிறது அந்த கடை. வெயிலுக்கு ஒதுங்கியவர்கள் யாரும் அங்கே, தாகம் தணிக்காமல் செல்ல மாட்டார்கள். பக்கத்திலே, 'கரும்பு ஜூஸ் வேணுங்களா? என்றபடி, கரும்பு சாற்றை பிழிந்து கொண்டிருக்கிறார் லோகேஸ்வரி.

ஊரடங்கால் குடும்ப பொருளாதார சூழ்நிலையை சமாளிக்க முடியாது பெற்றோருக்காக, கூலி வேலைக்கு செல்லும் எத்தனையோ கல்லுாரி மாணவிகளில் இவரும் ஒருவர். அவிநாசி அரசு கலை கல்லுாரியில் பி.எஸ்சி., வேதியியல் மூன்றாமாண்டு படித்துக்கொண்டே, குடும்ப பாரத்தை சுமக்க அம்மாவுடன் இணைந்து கரும்பு ஜூஸ் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவரிடம் பேசினோம்...

அப்பா ஆட்டோ டிவைர். வாடகை வீட்டில் வசிக்கிறோம். எனக்கு இரு தங்கைகள் உண்டு. ஒருவர் கல்லுாரி முதலாமாண்டு, இன்னொருவர் பிளஸ் 2 படிக்கிறார். மூத்தவள் என்ற முறையில் குடும்ப பாரத்தை குறைக்க நானும் வியாபாரத்தில் இணைந்துவிட்டேன். வழக்கமான நாட்களில் கல்லுாரி முடிந்ததும் கடைக்கு வந்துவிடுவேன்.

அம்மாவுக்கு உதவியாக, மெஷினில் கரும்பு ஜூஸ் பிழிவேன். ஊரடங்கு சமயத்தில் வியாபார மின்றி நாட்களை கடத்துவது சிரமாக இருந்தது. பொருளாதார ரீதியாக மிக பின்தங்கினோம். கல்லுாரி இல்லாததால், ஆன்லைன் வகுப்பு போக மற்ற நேரங்களில் அம்மாவுக்கு உதவி செய்கிறேன். கிடைக்கும் தொகையில் எனக்கான பொருட்களை வாங்கி கொள்கிறேன்.

கடையில் நேரம் கிடைக்கும் போது படிப்பேன். அதைப்பார்த்து, 'நீ ஏம்மா சிரமப்படறே?' என கேட்பவர்களே அதிகம். குடும்ப சூழலால், படிப்பை பாதியிலே நிறுத்தாமல் தொடர்ந்து படிக்க ஊக்குவிக்கும் பெற்றோருக்காக அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய, இந்த 'ரிஸ்க்' கூட எடுக்கவில்லை என்றால் எப்படி?' என்கிறார், தன்னம்பிக்கை தவழ. அவருக்கு, உதவ நினைப்போர், 99431 23788 எண்ணில் அழைக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us