தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/திருமதி விவசாயி!

திருமதி விவசாயி!

திருமதி விவசாயி!


PUBLISHED ON : ஆக 08, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விவசாயம் செய்யும் இல்லத்தரசிகளை அங்கீகரிக்கும் விதமாக தன் 'யு டியூப்' சேனலுக்கு 'உழவி ஆர்கானிக்' என்று பெயர் சூட்டியுள்ளார் விழுப்புரம் அனுராதா.

கணவர்: நடராஜன்

படிப்பு: பி.காம்.,

பிள்ளைகள்: ஒரு மகன்

வயது: 38

என் உலகம்

எங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர்ல, 20 சென்ட் நிலத்துல 15 வகையான பழ மரங்கள், காய்கறி செடிகள், கீரைகளை உள்ளடக்கி ஒரு உணவுக்காடு உருவாக்கி இருக்கேன். எங்க குடும்ப தேவைக்குப் போக விற்பனைக்கும் இது உதவுது! இதோட, கோழி வளர்ப்பும் உண்டு. நிலத்தடி நீரை தக்க வைச்சுக்க உதவுற 'மீன் குட்டை' மீன்கள் விற்பனையும் வருமானம் தருது!

இயற்கை விவசாயம் செய்ற பலரும் கால்நடை வளர்ப்புல தப்பு பண்றாங்க; பசு மாடுகளுக்கு சினை ஊசி போடுறாங்க; இது குற்றம்னு நினைக்கிறதால இந்த பாவத்தை என் பசுக்களுக்கு நான் செய்றதில்லை!

அனுராதாவின் காய்கறி விற்பனைக்கு சென்னையிலும் வாடிக்கையாளர்கள் உண்டு! தன்னுடைய முயற்சியில் அருகாமை விவசாயிகளையும் இணைத்திருக்கும் இவரது கனவு... 'நஞ்சில்லா காய்கறிகள்' சந்தை.

விக்கிரவாண்டி - செஞ்சி சாலையில் 12 கி.மீ., தொலைவில் இருக்கிறது இவரது புதுப்பாளையம் கிராமம்.

70106 21983

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us