தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/ஏழு மணி நேரம் தொடர்ந்து நடனமாடி மாணவி சாதனை!

ஏழு மணி நேரம் தொடர்ந்து நடனமாடி மாணவி சாதனை!

ஏழு மணி நேரம் தொடர்ந்து நடனமாடி மாணவி சாதனை!


PUBLISHED ON : ஆக 07, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை வேளாண் பல்கலை மாணவி சுபிக்ஷா, தொடர்ந்து ஏழு மணி நேரம் இடைவிடாமல் பரதநாட்டியம் ஆடி, சாதனை புரிந்துள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இரண்டாமாண்டு தோட்டக்கலைத்துறையில் படித்து வரும் சுபிக்ஷா, கடந்த 12 ஆண்டுகளாக கோவை கல்ச்சுரல் அகாடமியில், பரத நாட்டியம் கற்று வருகிறார். அண்ணாமலை பல்கலையின் கீழ், நடனம் சார்ந்த எட்டு தரச்சான்றிதழ் படிப்புகளையும் முடித்துள்ளார்.

வடவள்ளி கோவை கல்ச்சுரல் அகாடமி அரங்கில், 'மேஜிக் புக் ஆப் ரெக்கார்டு' நிறுவனத்தின் தலைவர் யாதவ் முன்னிலையில், சாதனை நிகழ்ச்சி அரங்கேறியது.

மாணவி, காலை, 6.15 முதல் மதியம், 1.15 மணி வரை ஏழு மணி நேரம், இடைவிடாது பரதம் ஆடி, சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். ஏழு மணி நேரத்தில் அலாரிப்பு, ஜதீஸ்வரம், பதம், வர்ணம், தில்லானா, ராமாயணம் என அனைத்து அடவுகளையும் செய்து, பார்வையாளர்களை அசத்தினார்.

சுபிக்ஷா கூறுகையில், 'எனது குரு, பெற்றோர் ஊக்குவிப்பால் சாதனை சாத்தியமாகியுள்ளது. சிறுவயதிலிருந்தே பரதம் கற்றுக்கொள்வதில், எனக்கு அதிக ஆர்வம் உண்டு.

''கற்றுக்கொண்டதை வைத்து, புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், இச்சாதனைக்கு முயன்று வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பரதத்தில் புதிதாக ஏதேனும் முயற்சித்து, பல சாதனைகளை புரியவேண்டும் என்பது என் கனவு,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us