தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண்ணை என் பெருமை!

பெண்ணை என் பெருமை!

பெண்ணை என் பெருமை!


PUBLISHED ON : ஆக 02, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 02, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துப்பறிவாளர் என்றாலே எப்போதும் ஆணாகத்தான் நம் மனம் வரைகிறது. இந்த சூழலில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் பெண் துப்பறிவாளராக அடையாளம் காணப்படும் இவர், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த மாலதி அருள் மணிமாறன்; வயது 52.

என்ன சொல்லுது இந்த சமூகம்?

'இதெல்லாம் மாலதியால முடியாது'ன்னு அப்பப்போ குரல்கள் எழும்பிட்டுதான் இருக்கு. ஆனா, 'பெரிய சவால்களையும் சுலபமா சந்திக்கக்கூடிய திறன் மாலதிகிட்டே உண்டு'ன்னு மாலதிக்கு தெரியும். பேசுறவங்க பேசிக்கிட்டே இருக்கட்டும்; 'வெறும் வார்த்தைகளால நம்மை நிரூபிக்க முயற்சிக்கிறது கால விரயம்'ங்கிறது என் எண்ணம்!

'பெண்' - இந்த அடையாளம் கேடயமா?

கண்டிப்பா; அதுக்காக பெண் மிரட்டப்படவே மாட்டாள்; அவளோட குடும்பத்திற்கு அச்சுறுத்தலே இருக்காதுன்னு சொல்ல முடியாது! என் மகனும், மகளும் என் தோளுயரத்துக்கு வர்ற வரைக்கும் என் முகவரியே யாருக்கும் தெரியாமத்தான் வைச்சிருந்தேன்!

துப்பறிவாளரான அருள் மணிமாறனை காதலித்து கரம் பிடித்து அவரோடு இணைந்து பணியாற்றிய மாலதி, தனக்கொரு அடையாளம் வேண்டும் எனும் எண்ணத்திலும், தான் தனித்து இயங்கினால் பெண்கள் அதிகளவில் பயன்பெறுவர் எனும் நம்பிக்கையிலும் தனிப்பாதை வகுத்திருக்கிறார்.

இதுவரை வெற்றிகரமாக இவர் செய்து முடித்திருக்கும் பணிகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் மேல்!

பணி நேர்மை/ தாய்மை உணர்வு - இரண்டில் எதற்கு முன்னுரிமை?

என் பணியால ஏதாவது ஒரு தரப்புக்கு பாதிப்பு ஏற்படும்னா, ஒருபோதும் அந்த பணியை நான் ஏத்துக்கிறதில்லை. ஒரு காதல் விவகாரம்; பையனை கண்காணிச்சதுல அவன் தவறானவன்னு தெரிஞ்சது. அதோட என் வேலை முடிஞ்சிருச்சுதான்; ஆனா, என் மனசு சம்மதிக்கலை! காதல் வயப்பட்ட பெண்ணை மறைவா நிற்க வைச்சு அந்த பையன்கிட்டே பேசினேன்; அவன் முகத்திரை விலகுச்சு; இப்போ, அந்த பொண்ணு நல்ல இடத்துல மகிழ்ச்சியா இருக்குறா!

பெண் சுதந்திரம் பற்றி...?

ஆண்களோட முகத்தை பார்க்காம பெண்கள் திருமணத்திற்கு சம்மதம் சொன்ன காலங்கள் போய், 'எனக்கு ஒரு வரன் பார்த்திருக்காங்க. அந்த பையனை பற்றி தெரியணும்'னு பெண்கள் துப்பறிவாளர்களைத் தேடி வர்ற அளவுக்கு காலம் மாறியிருக்கு. ஆனாலும், இந்த மாற்றத்தை எல்லாரும் தயக்கமில்லாம வரவேற்குற நிலை வரலை! அப்படி ஒரு சூழல் வந்தா, அப்போதான் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைச்சிருக்குன்னு சொல்வேன்.

மாலதியின் புதுப்புது அர்த்தங்கள்!

நம்பிக்கை? - அரிதாரம்

சந்தேகம்? - உரிமை

பெண்? - உளி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us