தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/அன்புள்ள சிஸ்டர்!

அன்புள்ள சிஸ்டர்!

அன்புள்ள சிஸ்டர்!


PUBLISHED ON : டிச 12, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 12, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார், பெண்ணாடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை செவிலி ச.வேளாங்கண்ணியின் ஆரம்ப காலங்கள் லட்சியமற்றவை; பணியில் ஈடுபாடற்ற நிலையில் இருந்தவர் கடந்த ஆண்டிற்கான 'சிறந்த செவிலி' விருதினை ஜனாதிபதியிடம் பெற்றது எப்படி?

பணி துவக்கம்: 1989ம் ஆண்டு

முதல் களம்: தனியார் மருத்துவமனை, கடலுார்.

பதவி: செவிலி

துறை அனுபவம்: 32 ஆண்டுகள்

புயலிலே பூத்த பூ

'ஆசிரியை ஆகணும்'னு விருப்பம். ஆனா, ராணுவ வீரரான அப்பாவோட கட்டாயத்தால 'செவிலி' ஆனேன். அப்பாவுக்கு இருந்த தீரா குடிப்பழக்கத்தால எங்களுக்குள்ளே அவ்வளவு இணக்கம் இருந்ததில்லை. அவர் இறக்கும்போது கடைசி தம்பிக்கு வயசு 7; எனக்கும் அம்மாவுக்கும் 15 வயசு வித்தியாசம். 150 ரூபாய் சம்பளத்துல குடும்ப பாரத்தை சுமந்தேன்.

நாலாபக்கமும் வாழ்க்கையை புரட்டிப் போட்ட நாட்களுக்கு மத்தியில வளர்ந்ததால செவிலி பணியில மனசு ஒட்டவே இல்லை!

காரணம் சொல்லி கடமை தவறுறது தப்பில்லையா சிஸ்டர்?

ரொம்ப பெரிய தப்பு! என் மகனை 1998ல பிரசவிச்சதுக்கு அப்புறம் மற்ற தாய்மார்கள் பிரசவத்தையும் என் பிரசவ மனநிலையில இருந்து நான் அணுக ஆரம்பிச்சேன். அதனாலதான், 3.5 அடி உயரமுள்ள ஒரு பொண்ணுக்கு வெற்றிகரமா இரண்டு பிரசவம் பார்க்க முடிஞ்சது. பாம்பு, தேள் ஊர்ந்து போற கட்டடத்துல நிம்மதியா உறங்குற மனசு கிடைச்சது. என் மகன் கடுமையான மூச்சுத்திணறல்ல சிரமப்பட்டுட்டு இருக்குற நேரத்துலேயும் என்னால பணியில ஈடுபட முடிஞ்சது. காரணம் சொல்லி தப்பிக்கிற பழக்கம் 1998க்கு பிறகு என்கிட்டே இல்லை!

மனதிலே ஒரு முள்

ஒரு பையனுக்கு தடுப்பூசி போட்டப்போ வீக்கம் ஏற்பட்டிருச்சு. பயத்துல அவனோட அம்மா அவனுக்கு போலியோ மருந்து தரக்கூடாதுன்னு பிரச்னை பண்ணினாங்க. எவ்வளவோ முயற்சி பண்ணியும் அவங்க அறியாமையை போக்க முடியலை. மூணே மாசத்துல அந்த பையனுக்கு போலியோ தாக்கி கால்கள் ரெண்டும் முடங்கிருச்சு. இப்பவும் அந்த பையனை சந்திக்கிற தருணங்கள்ல மனசு கனத்துப் போகுது!

எதிர்காலத்தில் செவிலியர் பணி எப்படி இருக்கும்?

மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்துல பிரசவம் பார்த்திருக்கோம்; இப்போ, தொழில்நுட்பம் பெரிய அளவுல வளர்ந்திருக்கு!

அதேநேரத்துல, மனிதர்களோட ஆரோக்கியம் ரொம்பவே கெட்டுப் போயிருக்கு; குறிப்பா... 'கொரோனா'வுக்கு அப்புறம் நிலைமை ரொம்ப மோசம்! எதிர்காலம் எங்களுக்கு ரொம்பவே சவாலா இருக்கும்.

சுருக்!

'நர்ஸ் வேலையா... டீச்சர்னா ஓகே!' - ஒரு செவிலியை வரன் பார்க்க வந்தவர் சொன்னது; ஏங்க இப்படி?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us