PUBLISHED ON : மார் 05, 2023

'எனக்கு வாய்ப்பு கிடைத்தது... உத வினேன்; என் இடத்தில் வேறு செவிலி இருந்திருந்தாலும் அன்றைய நாள் உதவியிருப்பார்!' - தனக்கு கிரீடம் சூட்டப்படுகையில், இப்படி சாதாரணமாய் அதை துறப்பவர் நிச் சயம் கொண்டாடப்பட வேண்டியவர்!
பணி துவக்கம்: 2009
முதல் களம்: தனியார் மருத்துவமனைபதவி: செவிலிதுறை
அனுபவம்: 14 ஆண்டுகள்
பிப்ரவரி 5, 2022. காஞ்சிபுரம் பேருந்து நிலையம். இரவு 7:30 மணியளவில் மக்கள் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்க, ஒரு முதியவர் தரையில் சாய்கிறார். கூட்டம் விலக்கி வருபவர் முதியவரின் நாடி சோதிக்க, துடிப்பு இல்லை; சற்றும் தாமதிக்காமல் தன் கரம் கொண்டு சி.பி.ஆர்., சிகிச்சை அளிக்கிறார்; 30 நிமிடங்களில் மீண்டும் இயங்கத் துவங்குகிறது பெரியவரின் இதயம். சுற்றிலும் கரகோஷம்; கூடவே இவ்வாழ்த்து...
'நீங்க நல்லா இருக்கணும்மா'
வாழ்த்து பெற்றவர்... காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை செவிலி விஜயநிர்மலா. 37 வயதாகும் இவர் இரு ஆண் பிள்ளைகளின் தாய்!
அரசு மருத்துவமனை செவிலிய ருக்கான சவால்கள்?
'இங்கே எச்சில் துப்பாதீங்க; குப்பையை கொட்டாதீங்க; கை கழுவாதீங்க'ன்னு எத்தனை தடவை சொன்னாலும், மக்கள் சிலர் மதிக்கிறதே இல்லை. 'இது உன் சொத்தா'ன்னு அலட்சியமா கேட்கிறவங்ககிட்டே தொடர்ந்து போராடிட்டே இருக்குறோம். இவங்க மாறுறவரைக்கும், அரசு மருத்துவமனைகள் அழுக்காதான் இருக்கும்!
பணியும் பாடமும்
'முதுமையில ஆதரவில்லாம நிற்கிற மனிதர்களை அன்றாடம் நான் மருத்துவமனையில சந்திக்கிறேன். அவங்களோட பேசுறப்போ, 'வாழ்ற நாட்கள்ல அறம் சார்ந்து வாழ்ந்திருந்தா இப்படியான நிலைமை வந்திருக்காதோ'ன்னு தோணும்! கூடவே, 'இந்த நிலைமை நமக்கும் வரலாம்ங்கிற புரிதல் இல்லாத அளவுக்கா சமூகம் சீரழிஞ்சு கிடக்குது'ன்னும் வருத்தப்படுவேன்.
பெருமை - நிதானம்
'கொரோனா தீவிரமா இருந்த காலம்; மனஅழுத்தம் தாங்க முடியாம, 'இனி இந்த வேலை வேண்டாம்னு தோணுது'ன்னு கணவர்கிட்டே சொன்னேன். 'நீயும் இதை 'வேலை'ன்னுதான் நினைக்கிறேன்னா... உன் இஷ்டம்'னு சொன்னார்!
'செவிலி பணி குறித்த புரிதலை என் கணவருக்கு மிகச்சரியா கடத்தியிருக்கேன்'னு பெருமை ஒருபக்கம்; 'பதற்றமான சூழல்ல எந்த முடிவையும் எடுக்கக்கூடாது'ங்கிற அனுபவம் கிடைச்ச சந்தோஷம் மறுபக்கம்! நிறைஞ்ச மனசோட சொல்றேன்... இந்த பணியில இன்னும் நான் பயணிக்க வேண்டிய துாரம் அதிகம்.
சுருக்: 'நான் நல்லாயிருந்தா போதும்'னு நினைக்கிற மனநோய்க்கு மருந்து வரணும்; என் கையால நான் எல்லாருக்கும் தரணும்!
