தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/அக்கரை அதிசயம்!

அக்கரை அதிசயம்!

அக்கரை அதிசயம்!


PUBLISHED ON : பிப் 26, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 26, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாய், தந்தையின் அடியொற்றி பாம்பு பிடிப்பதை பணியாக்கிக் கொண்ட வர் அலமேலு. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள அருங்குன்றம் கிராமத்தில் இவர் மட்டும் தனித்து தெரிய காரணம்... பாம்புகள் மீதான இவரது ஈடுபாடு!

சிணுங்காத குழந்தை

பிடிச்ச பாம்புகளை எப்படி கையாளணும்னு அப்பா, அம்மாகிட்டே இருந்து தெரிஞ்சுக்கிட்டேன். மற்றபடி, அவங்க இருக்குற இடங்களை தேடிப் போறதுல இருந்து எல்லாத்துக்கும் அனுபவம்தான் ஆசிரியர்! இதுவரைக்கும், ஆயிரக்கணக்குல பாம்புகள் பிடிச்சிருக்கேன்; ஒரு பாம்பும் என்னை தீண்டினதில்லை; ஆனா, இந்த முயற்சியில பல தடவை தேள் கொட்டியிருக்கு! பாம்புகளை நாம பயமுறுத்தாம இருந்தா அவங்க குழந்தை மாதிரி!

அடிப்படை வசதிகள் முழுமை பெறாத வீட்டில் வசிக்கும் அலமேலு, கடந்த 10 ஆண்டுகளாக சென்னை முதலை பண்ணைக்கு, 'விஷமுறிவு' மருந்து தயாரிக்க பாம்புகள் பிடித்து தருகிறார். 'அவங்க' என்றே பாம்புகளை குறிப்பிடுகிறார்!

உயிர் கொள்கை

பாம்புகளோட இனப்பெருக்க காலத்துல அவங்களை தொந்தரவு பண்ண மாட்டேன். பாம்புகள் வயித்துல முட்டை/ குட்டி இருந்தாலோ, இல்ல... விஷம் கக்குற முதிர்ச்சி இல்லாம இருந்தாலோ பிடிச்ச இடத்துலேயே விட்ருவேன். அவங்க உணவுக்கு எலி, தண்ணீர் எல்லாம் வைச்சு கவனமா பார்த்துப்பேன். சின்ன காயம் கூட உயிருக்கே ஆபத்தா மாறிடும்ங்கிறதால கண்ணாடி மாதிரி அவங்களை கையாளணும்!

முதலை பண்ணையில் பணியாற்றும் அலமேலுவின் கணவர் காளிக்கு பாம்பு பிடிப்பதில் 25 ஆண்டுகள் அனுபவம். காலச்சூழலில் உடன் பணியாற்றிய பலர் வேறு பணிகளுக்குச் செல்ல, காளி - அலமேலு போல் சிலரே மிச்சம்!

இதுவும் கலை

பாம்புகளை அடையாளம் பார்க்குறது, விஷம் எடுக்குறது, காட்டுல விடுறதுன்னு நிறைய நுணுக்கங்கள் இருக்கு. குருவி, அணில் எழுப்புற சத்தத்தை வைச்சு பாம்புகளை கண்டுபிடிக்கணும். 'விஷமுறிவு' மருந்துக்கு, 10 பாம்புகள்ல இருந்து விஷம் எடுக்கணும். உயிர் காக்குற வேலைதான்... ஆனா, போதுமான வருமானம் இல்லை! இந்த கலை மதிக்கப்படணும்... காப்பாற்றப்படணும்!

கட்டுவிரியனின் பனித்துளி அளவு விஷம், 40 நிமிடங்களில் சுயநினைவை இழக்க வைக்கும்; உயிர் பிழைத்தாலும் நரம்பு மண்டலத்தில் நிரந்தர பாதிப்பை நல்ல பாம்பின் விஷம் ஏற்படுத்தும்; 38 வயதாகும் அலமேலுவின் வாழ்வாதாரம் இப்படியான பாம்புகளோடு உறவாடுவதில் இருக்கிறது. அன்றாடம் ஆபத்தை கையாளும் இவரது ஒரே வேண்டுகோள்...

'பாம்புகளை கொல்லாதீங்க மக்களே!'

ஆசைகள் 1000* கணவருக்கு நிரந்தர பணி வேணும்* வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு* மகள்கள் இக்கலையை கத்துக்கணும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us