தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண்மை என் பெருமை

பெண்மை என் பெருமை

பெண்மை என் பெருமை


PUBLISHED ON : பிப் 12, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் சமூகத்தில் பெண்கள் தனித்து வமாய் நிற்பது புலி கழுத்தில் மான் மணி கட்டுவதற்கு ஒப்பானது; அதி லும், தங்களின் சமூக பற்றுணர்வுக்கு செயல் வடிவம் கொடுக்க அவர்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கிறது!

சிதம்பரம் தில்லைநாயகபுரம் ஊராட்சியில், தன் முயற்சியில் நுாலகம் நடத்தி வரும் இவர் அரசுப்பள்ளி ஆசிரியை சசிகலா!

ஏன் நுாலகம்?

வயது, அனுபவம், அந்தஸ்துல தன்னைக் காட்டிலும் கீழே உள்ளவங்களை மனிதர்கள் சமமா நடத்துறது இல்லை. இந்த அவலம் சங்கிலித் தொடர் மாதிரி தொடர்ந்துட்டே இருக்கு. இது மாறணும்னா, குடும்பங்கள்ல சமத்துவம் மலரணும். இதுக்கு நிச்சயம் புத்தகங்கள் உதவும். 2019ல் துவக்கின இந்த நுாலகத்துல இப்போ 1,000 புத்தகங்களுக்கு மேல இருக்கு!

நுாலகம் நடத்துவதில் ஒரு பெண் எதிர்கொள்ளும் சவால்கள்?

பெண்களின் தனித்துவமான செயல்களுக்கு அவ்வளவு எளிதா இந்த சமூகத்துல அங்கீகாரம் கிடைச்சிருமா; 'பெரிய படிப்பு படிச்சிட்டா, அதுக்கேத்த மாப்பிள்ளைக்கு வரதட்சணை அதிகம் தரணும்'னு சொல்லிதான் பாதியிலேயே என் பொறியியல் படிப்பை நிறுத்தி, ஆசிரியர் பயிற்சி கல்வியில சேர்த்தாங்க!

இன்னைக்கும், சம்பாதிக்கிற பல பெண்களோட 'டெபிட் கார்டு' அவங்கவங்க கணவர் வசம்தான் இருக்கு; இதுதான் சமூகத்துல பெண்கள் கையாளப்படுற விதம்! என் கணவரோட ஆதரவு எனக்கு இருந்தாலுமே நுாலகத்துக்கான இடம் பிடிக்கிறதுல இருந்து, மாணவியரை நுாலகம் வரவழைக்கிறது வரைக்கும் நிறைய சவால்கள் இருந்தது!

நுாலகம் அமைக்க இடமின்றி சசிகலா சோர்வுற்றபோது அப்பகுதிவாசி ஒருவர் தன் மாட்டுத் தொழுவத்தை கொடுத்திருக்கிறார்; அந்த இடமே தற்போது நுாலகமாகி தகர கொட்டகையின் கீழ் இயங்கி வருகிறது!

கனவுக்கான போராட்டம் சோர்வு தரவில்லையா?

கனவு நிறைவேறணும்னு போராடுறப்போ எதிர்மறை கருத்துக்களையும், கசப்பான மனிதர்களையும் சந்திச்சாக வேண்டியது தவிர்க்கவே முடியாதது; இதெல்லாம் படிப்படியா குறைஞ்சு ஒருநாள் இல்லாம போகும்; அந்த நாள்தான் நம்ம கனவு நிறைவேறின நாள்; அதுவரைக்கும் சோர்வை எதிர்த்துப் போராடியே தீரணும்!

குடும்ப பொறுப்புகளுக்கு மத்தியில்...

என் குடும்பத்தோடு பேசி எனக்கான பொறுப்புகள்ல சமரசம் பண்ணிதான் இந்த பணியை செய்றேன். இந்த இடத்துல உங்ககிட்டே நான் கேட்குறேன்... இந்த கேள்வியை ஆண்கள்கிட்டே ஏன் இந்த சமூகம் கேட்க மாட்டேங்குது?

பள்ளி பாட நுால்களும் இவரது நுாலகத்தில் உண்டு. இச்சேவையில் நுாலகர், பயிற்றுனர் என இரு பெண்களுக்கு வேலைவாய்ப்பு தந்திருக்கிறார் சசிகலா.

சசிகலாவின்புதுப்புது அர்த்தங்கள்* வாழ்க்கை? - லட்சியம்* சமூகம்? - தேர்* அறிவு? - மூச்சு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us