PUBLISHED ON : ஜூன் 27, 2020

வெண்ணிலா பாட்டிக்கு வைத்தியம் சொல்வதென்பது வாய் வந்த கலை.
ஆயிரத்திற்கும் அதிகமான வீடியோக்களை 'யு டியூப்'பில் பதிவேற்றி, ஆறு லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களை பெற்றிருக்கும் இந்த 68 வயது பாட்டி, கை வைத்தியங்களோடு குழந்தை வளர்ப்பு, ஊட்டச்சத்து உணவுகள் தயாரிப்பையும் கற்றுத் தருகிறார்.
பாட்டியோட பால்ய காலம்?
சொந்த ஊரு தேனி; அம்மா - அப்பாவுக்கு டீச்சர் வேலை; 'அதிகாலை எழுகின்ற பறவை நெடுந்துாரம் செல்லும்'னு சொல்லிக் கொடுத்தாங்க; பழக்கத்துக்கு கொண்டு வந்துட்டேன். பத்தாம் வகுப்புல ஆங்கில பாடத்துல தோல்வி. 'அவ பாஸாகியிருந்தா காலேஜ் படிக்க வைக்கணுமே!'ன்னு சொல்லி இனிப்பு கொடுத்து கொண்டாடினார் அப்பா; அன்னைக்கெல்லாம் வாத்தியாருக்கு அடிமாட்டு சம்பளம்தானே!
இந்த 'யு டியூப்' அடையாளத்திற்கான துவக்கப்புள்ளி?
என் கல்யாணம், 17 வயசுல; மதுரையில வீட்டு வாசல்ல ஒரு பெட்டிக்கடை நடத்தினேன். கடைக்கு வர்றவங்ககிட்டே என் பாட்டி கத்துக்கொடுத்த கை வைத்தியங்களை சொல்ல ஆரம்பிச்சேன். அவர், 2006ல இறந்ததும் மகன் கூட சென்னைக்கு வந்தேன். 2018ல, 'தமிழ் பாட்டி வைத்தியம்' சேனல் உதயம்.
பாட்டி சொல்லை தட்டாதே!
ஒரு லிட்டர் தண்ணீர், ரெண்டு கையளவு வேப்பிலை, ஒன்றரை ஸ்பூன் மஞ்சள் துாள் கலந்து கொதிக்க வைச்சு, மூணு துண்டு பச்சை கற்பூரம் சேர்த்து பாருங்க... அதுதான் கிருமிநாசினி!
