தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/24/7 மகிழ்ச்சி

24/7 மகிழ்ச்சி

24/7 மகிழ்ச்சி


PUBLISHED ON : ஜூலை 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மனம் நிறைக்கும் பல்வேறு அனுபவங்கள் தரக்கூடியது மழலையர் பள்ளி' என்கிறார், திருச்சி தில்லை நகர் 'ஸ்மார்ட் நின்ஜா' மழலையர் பள்ளி ஆசிரியை இரா.மாலா.

சின்ன சிரிப்பு

'மிஸ்...'னு குழந்தைங்க என்னை கூப்பிட்டாலும், 'அம்மா'ன்னு கூப்பிடுற மாதிரிதான் எனக்கு கேட்கும். 'நான் பொறாமைப்படுற அளவுக்கு எந்தநேரமும் வீட்டுல உங்க புராணம்தான்'னு அம்மாக்கள் சொல்றப்போ, ஒரு சின்ன சிரிப்போட குழந்தைகள் நம்மளை பார்க்கும் பாருங்க... அய்யோ... அது செம பீலிங்! இந்த ஊரடங்குல, அதையெல்லாம் ரொம்பவே மிஸ் பண்றேன்.

உங்களோட பொறுப்பு என்னன்னு நினைக்கிறீங்க?

நிறைய குழந்தைகளுக்கு 'மாலா மிஸ்'னு சொல்ல வராது; 'மானா மிஸ்'தான்! ஒரு குழந்தை ரெண்டு மூணு தடவை என்னை அப்படி கூப்பிட்டுட்டே இருந்துச்சு; அதுக்கு கொஞ்சம் முன்னாடிதான் நாங்க 'டூ' விட்டிருந்ததால, நான் அமைதியா இருந்தேன். திடீர்னு எழுந்து வந்தவ, 'என்னங்க... கொஞ்சம் இங்கே பாருங்களேன்'னு என் நாடி திருப்பிட்டா; என்னால சிரிப்பை கட்டுப்படுத்த முடியலை. விசாரிச்சா, 'எங்க அம்மா இப்படித்தான் அப்பாவை கூப்பிடுவாங்க'ன்னு சொன்னா!

'எப்படி வாழணும்னு சொல்லிக் கொடுக்குறதை விட, எப்படி வாழணும்னு நாம வாழ்ந்து காமிக்கிறதுதான் குழந்தைங்க மனசுல நிற்கும்'னு நான் உணர்ந்தேன்; நான் உணர்ந்த இந்த உண்மைதான் எனக்கான பொறுப்பு.

ஒன்... டூ... த்ரீ...

* தவளை காலடித்தடம் வரையப்பட்ட இடங்கள்ல, 'ஒன்... டூ... த்ரீ...' சொல்லிக்கிட்டே குதிச்சு குதிச்சு போறது ஒரு விளையாட்டு. ஒரு குழந்தைக்கு ஒரு வாய்ப்புதான். குதிக்கிற ஆசைக்காக சில வாண்டுகள் வேணுமின்னே எண்ணிக்கையை தப்பா சொல்லி மறுபடி மறுபடி தாண்டுறது அவ்வளவு அழகா இருக்கும்.

* தனக்கு பிடிக்காத ஒரு காய்கறியை நாம பாராட்டின ஒரே காரணத்துக்காக கஷ்டப்பட்டு சாப்பிடுறப்போ, கடுப்போட இருக்குற அந்த பிஞ்சு முகத்துல பூக்கும் பாருங்க ஒரு புன்னகை... அப்படியே அள்ளி கொஞ்சலாம் போல இருக்கும்.

'நாம்' எனும் மருந்து!

'உனக்கு இந்த பிஸ்கெட் பிடிக்கும்தானே'ன்னு சொல்லி, கொண்டு வந்ததை பகிர்ந்துண்ண என் பிள்ளைகளுக்கு தெரியும்! வகுப்பறையில கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்புலேயும், 'சுயநலம் வேண்டாம்'ங்கிறதை அழுத்தமா உணர்த்துறேன். 'ஆன்லைன்' வகுப்பு சூழல்ல இதுக்கெல்லாம் இப்போ வாய்ப்பு இல்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us