தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண்மை நம் பெருமை!

பெண்மை நம் பெருமை!

பெண்மை நம் பெருமை!


PUBLISHED ON : ஜன 16, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 16, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அந்த மூன்று நாட்களில் எந்த பெண் தெய்வமும் கோவிலை விட்டு வெளியே செல்வதில்லை' எனும் பெரும் சிந்தனையின் கம்பீர வடிவமாய் நிற்கின்றனர்... நந்தன், ப்ரஹலாத்!

இருவரும் சென்னை, பெசன்ட் நகர் இரட்டையர்; வயது 16; எம்.சிடி.எம். சர்வதேச பள்ளியில் பிளஸ் 1 படிப்பு. அப்பா பழனியப்பன் தொழிலதிபர்; அம்மா நந்தினி கல்வியாளர்.

உங்க குறிக்கோளுக்கு பல பாதைகள் இருக்கு; இந்த பாதை எதற்காக நந்தன்?

உதிரத்தால உருவாகி உதிரத்தோட இந்த பூமியில உதிர்ந்தவங்கதானே நாம எல்லாரும்! அதான், அந்த ஈரத்துல இருந்தே எங்க பயணத்தை ஆரம்பிக்கணும்னு முடிவு பண்ணினோம். எங்க முயற்சியால பெண்கள் மீதான ஆண்களோட பார்வை மாறணும்...

தோழமை உணர்வு மேலோங்கணும்னு பிரியப்படுறோம்!

டிசம்பர் 27 - டிசம்பர் 30, 2021; சென்னை ஒதுக்கிய செம்மஞ்சேரி குடியிருப்பிற்கு அம்மா நந்தினியோடு பயணப்படுகின்றனர் இரட்டையர்கள்; அங்கே... வளரிளம் பெண்கள் 380 பேர்; அவர்கள் முன் ப்ரஹலாத்தும், நந்தனும்; நந்தன் கையில்... சானிட்டரி நாப்கின். எந்த தயக்கமுமின்றி 'நாப்கின்' பயன்படுத்தும் முறை, மாதவிடாய் காலத்து உணவுகள், உடற்பயிற்சிகள் குறித்து நந்தன் விளக்க... சில பெண்களிடம் கூச்சம்! நந்தினி முன் வருகிறார்.

'ரெண்டு ஆம்பளை பசங்க இதை பத்தி ஏன் பேசக்கூடாதுன்னு நினைக்கிறீங்க?'

'பேசலாம்; பேசணும்!' - கூட்டத்தில் இருந்து ஒரு குரல். 'அருமையா சொன்னேம்மா; இந்த தைரியம் பெண்களுக்கு வேணும்; இந்த தைரியத்தை தன்னம்பிக்கைதான் கொடுக்கும்; மாதவிடாய் காலத்து கூச்சம், தயக்கத்தை நாம உடைக்கிறது மூலமா இந்த தன்னம்பிக்கை நமக்கு கிடைக்கும்' நந்தினி சொல்ல, பெண்கள் கூட்டத்தில் தலையசைப்பு; இரட்டையர் முகத்தில் பெருமிதம்!

கடுமையான இருள்; இரண்டு மின்மினி பூச்சி; இருள் நீங்கிடுமா ப்ரஹலாத்?

இந்த உலகத்துக்கே 24 மணி நேரமும் வெளிச்சம் கிடையாதுங்கிறப்போ, எங்க நோக்கம் இருள் நீக்குறது இல்லை; 'வெளிச்சம் இருக்கு'ன்னு நம்பிக்கை ஏற்படுத்துறது; அவ்வளவுதான்! 'மாதவிடாய் காலம் தீண்டத்தகாதது அல்ல'ன்னு தன் வீட்டு ஆண்களுக்கு இந்த பெண்கள் புரிய வைக்கணும்; முன்னுதாரணமா நாங்க நிற்கணும்!

இரு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இரட்டையருக்கு வழிகாட்ட, அம்மா நந்தினி தோள் கொடுக்க, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 'நாப்கின்' விநியோகம் இதுவரை நடந்தேறியிருக்கிறது.

'பெண்களை இந்த சமூகம் வணங்குறதில்லை'ன்னு நினைக்கிறீங்களா தம்பி?

வணங்குறதுக்கும் மதிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குறது உண்மைன்னா, 'பெண்கள் வணங்கப்படணும்'னு விரும்புறோம்.

புதுப்புது அர்த்தங்கள்!

பெண்? - மனுஷி

ஆண்? - மனுஷன்

கடவுள்? - மனசு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us