PUBLISHED ON : மே 03, 2021

கலைச்செல்வியின் கணவர் - பூபாலன்பிள்ளைகள் - ஒரு மகன், மகள்வயது - 38
விழுப்புரம் மாவட்டத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் ஒரு கால், 15 பெண்கள் குழுவாக இணைந்து செயல்படும் மூலிகைத் தோட்டத்தில் மற்றொரு கால் என கலைச்செல்வி காலுான்றி நிற்பது இருவேறு களங்களில்! இதன்வழியே, கொரோனா சூழலிலும் பொருளாதார முடக்கமின்றி தன் குடும்பத்தை காப்பாற்றி இருக்கிறார்.
சிக்கன வாழ்க்கைநெல், எள், வேர்க்கடலை, மரவள்ளிக் கிழங்குன்னு எங்க பகுதிக்குரிய விவசாயம்தான்! பாசன தண்ணீருக்கும் காசு கொடுக்க வேண்டி இருக்கிறதால மாற்றுப் பயிர்களுக்கு முயற்சிக்கிறதில்லை. வயல் வேலைகளை பெண்கள் நாங்களே பார்த்துக்கிறோம்!
சிறகடிக்கும் வாழ்க்கைஎங்க பகுதியோட 15 பெண்களை இணைச்சது நடுக்குப்பத்து தனியார் மூலிகை பண்ணை! எலும்பு ஒட்டி தைலம், திரிகடுகன் சூரணம், தலைமுடி தைலம்னு 30க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டு பொருட்களை 500க்கும் அதிகமான மூலிகைகள்ல இருந்து தயாரிக்கிறோம்.
இது முக்கியம்மூலிகை சார்ந்த மதிப்புக்கூட்டு பொருள் தயாரிப்புகள் பற்றி குழு மூலமா பயிற்சி தர்றோம். மூலிகை வளர்ப்புங்கிறது ஓர் அறிவு; இதை எல்லார்கிட்டேயும் பகிர்ந்துக்கிறது ரொம்ப முக்கியம்.
மரக்காணம் - புதுச்சேரி சாலையில் 15 கி.மீ. இருக்கிறது வண்டிப்பாளையம் கிராமம்.
