தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண்மை என் பெருமை

பெண்மை என் பெருமை

பெண்மை என் பெருமை


PUBLISHED ON : ஏப் 29, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதலையின் பிடியில் சிக்கிக் கொண்ட உயிரினத்திற்கு இரண்டு வாய்ப்புகள். முதலாவது, போராடி தப்பித்து வாழ்நாளை கூட்டிக் கொள்வது. இரண்டாவது, தலைவிதி என கருதி போராடாமல் முதலைக்கு இரையாவது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த கானுயிர் புகைப்பட கலைஞர் ஜெ.ஸ்ரீதேவியின் தேர்வு முதலாவது!

வனம் என்பது?

பல்லாயிரம் உயிரினங்கள் ஒரே கூரையின் கீழ் வாழும் வீடு, வனம். தன்கிட்டே இருக்கும் கடைசி புல்லை கூட தன்னை சார்ந்துள்ள உயிரினங்களுக்கு கொடுக்கக் கூடிய தாய். காப்பது, பேணி வளர்ப்பதுன்னு வனமும் ஒரு பெண் தான்.

கானுயிர் புகைப்பட கலைஞர் கனவை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை வந்தால்?

'உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்'னு என் கணவர் காதலை சொன்ன போது கூட 'கல்யாணத்துக்கு அப்புறமும் நான் வன உயிர்களை படம் எடுப்பேன். உங்களுக்கு சம்மதம்னா எனக்கும் உங்க காதல்ல சம்மதம்'னு கனவை விட்டுத்தராம பேசினவ நான். ஏதோ அவரும் கானுயிர் புகைப்பட கலைஞராக இருந்ததால என்னை புரிஞ்சுக்கிட்டார்.

உங்கள் செயல் சமூகத்தில் நிகழ்த்திய பெரிய மாற்றம்?

பள்ளி மாணவர்களுக்கு வழி காட்டியா வனச்சுற்றுலா போயிருந்தேன். 'சுவிங்கம் சாப்பிட்டு காட்டுல துப்பினா, அதை சாப்பிடுற பறவைகள் இறந்து போகும்னு ஸ்ரீதேவி மேடம் சொன்னதை மறந்துட்டியா'ன்னு சக நண்பனை கண்டித்த மாணவன் தான் நான் பார்த்த முதல் மாற்றம்.

ஒரு பறவையை படம் பிடிக்கும் முயற்சியில் நிலைதடுமாறி விழுந்ததில் முதுகுத்தண்டில் பலத்த காயம். இன்னும் அதன் வலி தீராத நிலையிலும், வனம் மற்றும் வன உயிர்கள் மீதான காதல் துளியும் குறையவில்லை.

பெண்ணாக சந்தித்த ஆபத்துகள்?

நாலடி துாரத்துல என்னை நேருக்கு நேரா பார்த்த சிறுத்தை, நான் பெண் என்பதாலேயே என்னை தாக்காம கடந்து போயிருக்க வாய்ப்பில்லை. தலைதெறிக்க ஓடவிட்ட காட்டு யானை, நான் பெண் என்பதற்காக என்னை விரட்டாம இல்லை. ஆபத்துல 'ஆண் ஆபத்து - பெண் ஆபத்து'ன்னு தனியா எதுவுமில்லைகிறது என் அனுபவம்.

ஆனாலும் பெண்கள் சமூகத்துக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கே?

பெண் தனித்து செய்யும் எல்லாமே கேள்விக்குள்ளாகும். ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லிட்டு இருந்தா எடுத்த காரியம் நகராது. உறுதியான செயல்பாடு நம் கனவு மீது நமக்கு இருக்கும் தீர்க்கத்தை உணர்த்தும். இதை செய்துட்டா எந்த கேள்வியும் தடையாக இருக்காது.

ஸ்ரீதேவியின் புதுப்புது அர்த்தங்கள்

இயற்கை? - துணிச்சல்

பயம்? - பொய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us