தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/முதல்வர் பேசுகிறேன்...

முதல்வர் பேசுகிறேன்...

முதல்வர் பேசுகிறேன்...


PUBLISHED ON : ஏப் 22, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இது மட்டும்தான் என் பணி; எனக்கான பணி நேரம் இவ்வளவுதான்!' கரூர் எழுதியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆ.கலா, தன்னைச் சுற்றி ஒருபோதும் இப்படியொரு வட்டத்தை வரைந்து கொண்டதில்லை!

சுவர்களுக்கு வெளியே...

தினக்கூலிகளோட பிள்ளைகளா இருக்குற என் மாணவர்கள், இந்த கொரோனா ஊரடங்குல தன் பெயரை பிழையில்லாம எழுதுறதையே மறந்துட்டாங்க! டிசம்பர் மாதம் இதை நான் உணர்ந்த நிமிஷத்துல இருந்து ஒவ்வொரு மாணவர் வீட்டுக்கும் போய் தனித்தனியா வகுப்பெடுக்கிறேன். தினக்கூலிகளா இவங்களும் மாறிடக்கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்குறேன்!

பயம் வேண்டாமே!

'தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகரா என் மாணவர்களும் ஆங்கிலத்துல உரையாடணும்'ங்கிற ஆசையில, சொந்த செலவுல, 'ஸ்போக்கன் இங்கிலிஷ்' பயிற்றுனரை நியமிச்சிருக்கேன். இந்த பள்ளிக்கு 2012ம் ஆண்டுல நான் வந்த பிறகு, படிப்பை முடிச்சு நடுநிலைப் பள்ளிக்கு போன மாணவர்கள் ஆங்கில வழி கல்வியைத்தான் தேர்ந்தெடுத்து இருக்காங்க!

இயற்கையோடு இணைந்து...

'ஒவ்வொரு தீபாவளிக்கும், பிறந்தநாளுக்கும் என் மாணவர்கள் மரக்கன்றுகள் நடுறாங்க. இப்போ, மாணவர்கள் வீட்டுலேயும் நிறைய செடி, கொடிகள் வளர்ந்து நிற்குது. பள்ளி முதல்வரா என் மாணவர்கள் மத்தியில 'பசுமை புரட்சி' ஏற்படுத்தினதுல எனக்கு பெரும் திருப்தி.

தலைமை பண்பு

ஆசிரியர் பயிற்சி முடிச்சு 1988ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியில பணிக்கு சேர்ந்தேன். அப்போ நான் எழுதுற 'ஓ' எழுத்து 'ஞ' மாதிரி இருக்கும். என் வகுப்பு மாணவன் அதை திருத்தினான். இப்போவரைக்கும் மாணவர்கள்கிட்டே இருந்து கத்துக்கிறதை நான் நிறுத்தலை. இந்த குணம் தலைமை பொறுப்புக்கு அவசியம்னு நான் நினைக்கிறேன்.

தன்னம்பிக்கை

என் மாணவர்களுக்கு 'அஞ்சலக பணம் சேமிப்பு' வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கேன். ஒன்றாம் வகுப்புல இருந்து மாதம் தோறும் சேமிக்கிற இந்த பழக்கம், நடுநிலைப் பள்ளி காலத்துல அவங்களுக்கு புது சைக்கிளோட சேர்த்து தன்னம்பிக்கையும் தருது!

திருத்தும் குறள்

'தவறு செஞ்சா ஒரு குறளும் அதுக்கான விளக்கமும் சொல்லணும்' - இதுதான் என்னோட கட்டளை. தவறு செய்ற மாணவர்கள் நல்லமுறையில திருந்த நான் தர்ற வாய்ப்பு இது! 'மாணவப் பருவத்துல தவறுகள் சகஜம்'ங்கிற யதார்த்த சூழல்ல நாளும் ஒரு குறள் அவங்க கைப்பிடிச்சு கூட வருது.

பகிர்தலே பலம்

'உணர்வு, உடைமை எல்லாம் பகிரப்படும் சூழல்லதான் நம்ம வாழ்க்கையோட இயக்கம் சீராகும்'ங்கிறது என் நம்பிக்கை. பகிர்தல் குணம் மாணவர்கள்கிட்டே வளரணும்; இது என் ஆசை!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us