தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/அவளே சரணம்!

அவளே சரணம்!

அவளே சரணம்!


PUBLISHED ON : மே 11, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 11, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இன்னும் எத்தனை நாள் இப்படியே முடங்கி கிடக்கப் போறீங்க; வாங்க நாடோடி ஆகலாம்' என்று அம்மா மாலினியிடம் கேட்டவர் சென்னை, மேடவாக்கத்தைச் சேர்ந்த இசை பிரகாஷ்.

அம்மா ஏன் நாடோடியாக வேண்டும்?

அம்மா பத்தாம் வகுப்பு படிக்கும்போதே, 'அக்காவோட பிள்ளையை பார்த்துக்கணும்'னு சொல்லி அவங்க படிப்புக்கு தடை போட்டுட்டாங்க. 18 வயசுல திருமணம். 19 வயசுல நான் பிறந்துட்டேன். அடுத்தடுத்து ரெண்டு தம்பிங்க. திருமணம் முடிஞ்சதும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம்; இப்போ, அம்மாவுக்கு 48 வயசு. இன்னமும் அவங்க ஓட்டத்தை நிறுத்தலை.

'எப்போம்மா உங்களுக்காக வாழப் போறீங்க?'ன்னு கேட்கும்போதெல்லாம் லேசா சிரிப்பாங்க. அவங்களுக்கு இந்த உலகத்தையும், புது மனிதர்களையும் அறிமுகப்படுத்தி வைக்க நினைச்சேன்; கொஞ்ச நாளாவது அவங்க அவங்களுக்காக வாழணும்னு ஆசைப்பட்டேன்; வாழ வைச்சிட்டேன்.

பயணம் தந்த மாற்றம்?

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில ஊர் சுற்ற கிளம்பினோம். எங்கேயும் அறை எடுத்து தங்கலை; பிரகாஷோட நண்பர்கள் வீடு, தோட்டம், காடுகளுக்கு உள்ளேன்னு ஒரு நாடோடி வாழ்க்கை!

பலதரப்பட்ட மனிதர்கள், பல சுவை உணவுகள்னு ஒவ்வொரு நாளும் ஆச்சரியம். திட்டமிட்ட பயணமா இருந்திருந்தா இந்த அனுபவங்கள் கிடைச்சிருக்காது.

அந்த 34 நாட்கள் பயணம், 'ஒரு பெண்ணால யார் தயவும் இல்லாம தனிச்சு வாழ முடியும்'ங்கிற நம்பிக்கையை எனக்குள்ளே விதைச்சது. '30 ஆண்டுகள் முன்னே நீ ஒரு சிறந்த கதைசொல்லி'ங்கிறதை எனக்கு நினைவுபடுத்தி, மறுபடியும் கதைசொல்லியா என்னை மாற்றியிருக்கு. பத்து பதினைஞ்சு ஆண்டுகளுக்கு முன்னால இந்த வாய்ப்பு கிடைச்சிருந்தா பெருசா சாதிச்சிருப்பேன்!

ஆக... அம்மா தனக்காக வாழ ஆரம்பிச்சிட்டாங்க; அப்படித்தானே பிரகாஷ்?

தனக்காகவும் பேச ஆரம்பிச்சிருக்காங்க. தன் பக்கம் நியாயம் இருந்தாக்கூட அப்பா முன்னாடி அமைதியா இருக்கிறவங்க, இப்போ தன்னோட கருத்துக்களை தைரியமா முன் வைக்கிறாங்க. இனி அவங்க நாட்கள் அவங்களுக்கானதா இருக்கும்.

உங்களோட ஆசை என்ன பிரகாஷ்?

அம்மா சைவம். ஆனா, அவங்களுக்கு மீன் பிடிக்க ரொம்ப ஆசை. திருச்சி காவிரிக்கு கூட்டிட்டு போனேன். துப்பட்டாவுல மீன்களைப் பிடிச்சு மறுபடியும் காவிரியில விட்டாங்க. பச்சமலை அருவியில ஆசை தீர கால் நனைச்சாங்க. சாலையோர கடையில ரசிச்சு ரசிச்சு தேநீர் குடிச்சாங்க. ஆவாரம் பூக்களை கொத்து கொத்தா பார்த்ததும் வண்டியை நிறுத்தச் சொல்லி ஓடிப்போய் அள்ளிக்கிட்டாங்க. ஒரு தகப்பனா மாறி எல்லாத்தையும் நான் ரசிச்சேன். காலம் முழுக்க இப்படி நான் ரசிச்சுக்கிட்டே இருக்கணும்; இது போதும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us