தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண் பார்வை!

பெண் பார்வை!

பெண் பார்வை!


PUBLISHED ON : ஆக 13, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 13, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலூர், வண்ணாரப்பாளையம் பகுதியில் 4,000 சதுர அடியில் பிரமாண்டமாய் நிற்கிறது 'கப்பல்' வீடு. நான்கு படுக்கையறை, உடற்பயிற்சி கூடம், உள்ளரங்கம், நீச்சல் குளம், நான்கு பக்க வாசல் என இரண்டு ஆண்டுகளாக எழுப்பப்பட்ட வீடு இன்று கடலூரின் அடையாளமாகி நிற்கிறது!

இவ்வீட்டின் குடும்ப தலைவர் கப்பல் பொறியாளரான சுபாஷ்; தலைவி சுபஸ்ரீ! 'காதலின் சின்னம் கப்பல் வீடு!' - சமூக வலைதளங்கள் இப்படி கொண்டாட, சுபஸ்ரீ என்ன சொல்கிறார்?

சுபஸ்ரீ: உண்மையை சொல்லணும்னா வீடு கட்டி முடியுற வரைக்கும் ஊருக்குள்ளே யாரும் பெருசா கண்டுக்கலை. கிரகப்பிரவேச வீடியோ வைரல் ஆனதுக்கப்புறம்தான் இப்படி ஒரு வரவேற்பு! 'என் கணவரோட அன்பு எத்தனை ஆழமானது'ன்னு இந்த வீடு எனக்கு அழுத்தமா புரிய வைச்சிருக்கு!

'கப்பல்' வடிவம் நிறைய விரயம் பண்ணியிருக்குமே...

கட்டுமானத்துக்கு அதிக நாட்கள், அதிக கூலி, வீணான நிலம்னு நிறைய சொல்லலாம். ஆனா, ஆறு மாதம் கப்பல்லேயும் ஆறு மாதம் எங்ககூடவும் செலவிடுற என் கணவர் எந்த விரயத்தையும் பற்றி யோசிக்காம வீட்டை கட்டிட்டார்!

'ரெண்டும் பொம்பளை பிள்ளைங்க; அதுக எதிர்காலத்துக்குன்னு இதை சேமிச்சிருக்கலாமே'ன்னு பேத்திங்க பாசத்துல என் அம்மா கேட்டப்போ, 'ஒரு தாய் ஸ்தானத்துல இருந்து நாம ஏன் அப்படி யோசிக்கலை'ன்னு எனக்குள்ளே கேட்டுக்கிட்டேன். கிடைச்ச பதில்... காதல்!

பள்ளித் தோழர்களான சுபாஷும், சுபஸ்ரீயும் கல்லுாரியிலும் அந்நட்பை தொடர்ந்து, 2007ல் காதல் பகிர, 2011ல் திருமணம். இன்று, இவர்களது தீரா அன்பின் சாட்சிகளாய் 11 வயதில் சுருதி, ஏழு வயதில் சுதிக் ஷா!

ஆடம்பரம் மூலமாத்தான் அன்பை வெளிப்படுத்தணுமா?

நிச்சயமா இல்லை. இது உங்க பார்வைக்குதான் ஆடம்பரம்; என் பார்வைக்கு அன்பு! சரக்கு கப்பல்ல அவருக்கு பணி. 'உங்களுக்கென்ன... கப்பல்ல உலகம் முழுக்க ஜாலியா சுத்துறீங்க; விதவிதமா சாப்பிடுறீங்க; எங்களுக்கு நாலு சுவருதான் உலகமே!'ன்னு ஒருநாள் விளையாட்டா அவர்கிட்டே சொன்னதோட விளைவுதான் இந்த வீடு; எங்க எல்லார் பேரோட முதல் எழுத்து அடிப்படையில, 'எஸ்4 குடும்பம்'னு வீட்டுக்கு பேரு; இதுகூட அன்பின் வெளிப்பாடுதான்!



சுபாஷின் அம்மா கமலம்: ஊர் உலகத்துல மது, சூதுன்னு சுத்துறவங்களுக்கு மத்தியில என் மகன் பொறுப்பா இருக்குறான்னு பெருமைப்படுறேன்!

சுபஸ்ரீயின் அடுத்த ஆசை?

வீட்டைச் சுற்றி இருக்கிற 7,000 சதுர அடியில 'மழலையர் பள்ளி' கட்டணும்!

சுபாஷ்... நீங்க என்ன சொல்றீங்க?

நாம நேசிக்கிற பெண்ணுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்; செய்யணும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us