தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!


PUBLISHED ON : ஆக 20, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 20, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எதிர்வரும் பேருந்தில் இருந்து 'ஹார்ன்' வணக்கம்; டீக்கடை முதியவரின் புன்னகை; கிராமத்து கோவிலில் நின்றிருக்கும் இளைஞரின் நலம் விசாரிப்பு அத்தனையையும் புன்னகையோடு ஏற்றுக்கொள்ளும் இளையராணி குமார், பேருந்து நடத்துனர்!

எப்படிங்க இதெல்லாம்?

'நாமக்கல் அரசுப்பேருந்தின் பெண் நடத்துனர்'ங்கிற அடையாளம் முதல் காரணம்; ஊர் பிரச்னைகளுக்கு முன்னால வந்து நிற்கிறது முக்கிய காரணம்!

ஊதியம் தவிர்த்து இந்த பணியின் பலன்?

பயணிகளோட நிறைய பேசுறேன்; அவங்க கதைகளை கேட்குறேன்; இதன்மூலமா, 'குடும்பமும் குடும்ப பொறுப்புகளும்தான் பெண்ணுக்கான அங்கீகாரம்'ங்கிற என் மூடநம்பிக்கை தகர்ந்திருக்கு; 'குடும்பம் ஒரு தங்க கூண்டு'ங்கிறதை முழுமையா உணர்றேன்!

பணியில் மறக்க முடியாத ஓர் அனுபவம்?

'இந்த பஸ் எங்கே போகுதோ, அங்கே ஒரு டிக்கெட் கொடுங்க'ன்னு கேட்கிற எல்லாருக்குள்ளேயும் ஏதோ ஒரு வலி இருக்கும். அப்படி ஒரு வலியோட, 'கணவர் கொடுமை... வாழ்ந்தது போதும்னு தோணிருச்சு கண்ணு'ன்னு ஒரு அம்மா அழுதாங்க. தோள் தடவி ஆறுதலா பேசினேன். என்னோட வார்த்தைகள்ல எது மனசை மாத்துச்சுன்னு தெரியலை... பேருந்து திரும்பி வர்றப்போ ஏறின நிறுத்தத்துலேயே இறங்கிட்டாங்க; அவங்க முகத்துல புன்னகை!

நாமக்கல் ராசிபுரம், பழனியப்பனுாரைச் சேர்ந்த இளையராணி, ராசிபுரம் - சேலம் '52 எல்எஸ்எஸ்' பேருந்தின் நடத்துனர். 2022ம் ஆண்டு பணியில் சேர்ந்த நாள் முதல் அதிகாலை 3:30 மணிக்கு கண்விழிப்பதும், சமையல் பணிகளுக்குப் பின் 5:20 மணிக்கு பணிக்கு கிளம்பி விடுவதும் இவரது வாடிக்கை!

'ஆண்கள் இப்படித்தான்!' - பணியில் இப்படியான பாடங்கள்...

ஒரு விபத்துல என் இடது கால் மூட்டு உடைஞ்சிருச்சு; அந்தநேரத்துல என் கூட பணியாற்றின ஆண்கள் அத்தனை பேரும் எனக்கு அவ்வளவு உதவியா இருந்தாங்க! பணி நேரத்துல, 'பணத்தை தொலைச்சிட்டேன்'னு டிக்கெட்டுக்கு காசு இல்லாம நின்ன ஆண்களுக்கு சொந்த காசை செலவு பண்ணியிருக்கேன். 'நாளைக்கு தந்துடுறேன்'னு சொல்லிட்டுப் போனவங்களும் உண்டு!

அன்றாடம் பணி முடித்து இவர் வீடு திரும்ப இரவு 10:30 மணி. மறுநாள் வார ஓய்வுக்கான நாள் எனினும் கல்லுாரி செல்லும் மகன்களுக்காகவும், பணிக்கு செல்லும் கணவருக்காகவும் காலை 6:00 மணிக்கு கண்விழித்தாக வேண்டிய கட்டாயம்; முழுமையான ஓய்வுக்கு வாய்ப்பில்லாத வாழ்க்கை எனினும் திருப்தியுடன் வாழ்கிறார் இளையராணி.

இந்த ஓட்டம் அவசியம்தானா?

அவசியம்; ஏன்னா, நிற்காம ஓடுற நதியில அழுக்கு தங்காது.

இளையராணியின் புதுப்புது அர்த்தங்கள்

*பயணம்? - வெளிச்சம்*பொறுப்பு? - சுகம்*சமையல்? - சாதனை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us