தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/இப்படித்தான் வாழ்கிறேன்

இப்படித்தான் வாழ்கிறேன்

இப்படித்தான் வாழ்கிறேன்


PUBLISHED ON : ஆக 27, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 27, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வணக்கம்.

நான் லட்சுமி; 'இனிஷியல்' போட் டுக்க விரும்பாத பொண்ணு; மயிலாடுதுறை 'அறிவகம்' காப்பகத்துல வாழ்றேன்; கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லுாரியில இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கிறேன்!

* கிரிக்கெட்/ கால்பந்து - எதன் ரசிகை லட்சுமி?

ரெண்டையுமே பார்க்க மாட்டேன்!

* கைப்பையில் எந்நேரமும் வைத்திருப்பது?

எப்பவும் ஏதாவது வரையுறதால... பென்சில் பாக்ஸ்!

* கிழிந்த உடைகளை பயன்படுத்தும் பழக்கம்?

நானே தைச்சு போட்டுக்குவேன்!

* சமீபத்தில் பார்த்த புதுப்படம்?

'டிவி'யில சீமராஜா பார்த்தேன்!

* சைக்கிள்/பைக் - எதன் மீது ஆசை?

நான் பயன்படுத்துற மாதிரி கார் வரணும்; நானே ஓட்டணும்!

ரெண்டு கைகளும் இல்லாததால நான் பிறந்த மூணாவது நாள்லேயே என்னை பெத்தவங்க இந்த காப்பகத்துல என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க. திடீர்னு ஒருநாள் என்னோட கரகாட்டத்தை 'பேஸ்புக்'ல பார்த்துட்டு என்னைத் தேடி வந்தப்போ, நான் அவங்க முகம் பார்க்கலை; இப்பவும் அவங்க யார்னு எனக்குத் தெரியாது!

பயணங்களில் லட்சுமி

பேருந்து பயணங்கள்ல உட்கார இடம் இல்லேன்னா கம்பியில தோளை முட்டுக்கொடுத்து நிற்பேன். திடீர்னு 'பிரேக்' அடிக்கிறப்போ பிடிமானம் இல்லாம விழுவேன். அதுக்கப்புறமும் எனக்கு யாரும் இடம் தர மாட்டாங்க!

இப்படித்தான் வாழ்கிறேன்

என் பாதங்கள்தான் என் கைகள். பாதங்களால சாப்பிடுறதால எந்நேரமும் பாதத்தை சுத்தமா வைச்சுக்குவேன். நானே வட்டமா தோசை சுட்டு சட்னி அரைச்சு சாப்பிடுவேன். கால் விரல்கள்ல பென்சில் பிடிச்சு பிள்ளையார் வரைவேன். மாவெடுத்து கோலம் போடுவேன். கண்ணுக்கு மை போட்டுக்குவேன்!

இதெல்லாத்தையும் விட, 'என் அக்கா சேலை கட்டி விட்டாங்க; பாப்பா தான் தலை பின்னி விட்டா'ன்னு காப்பகத்துல இருக்குற எல்லாரையும் உறவா நினைச்சு வாழ்றேன்!

கூந்தல் பின்னுவது, சேலை கட்டுவது உள்ளிட்ட ஒருசில தேவைகளுக்கு மட்டுமே பிறரின் உதவி நாடும் லட்சுமி, தன் கால்களால் தலைமேல் கரகம் ஏற்றி ஆடுவதில் வல்லவர்; கரகாட்டத்தில் பல மேடைகள் கண்டவர். தற்போது, களிமண்ணில் சிலை படைக்கும் வித்தையை கற்று வருகிறார்!

வலி உணர்கிறேன்

இந்த காப்பகத்தை துவக்கின கலாவதிதான் எனக்கு எல்லாமே; பிப்ரவரி மாதம் அவங்க தவறினதுக்கு அப்புறம்தான் வாழ்க்கையில முதன்முறையா 'அம்மா இல்லாத வலி'யை உணர்றேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us