தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/இப்படித்தான் வாழ்கிறேன்!

இப்படித்தான் வாழ்கிறேன்!

இப்படித்தான் வாழ்கிறேன்!


PUBLISHED ON : மே 28, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 28, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர், வேப்பங்குடி கிராமத்தை சேர்ந்த இவர் கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரியின் இளங்கலை மாணவி; அம்மா, அப்பா கூலித் தொழிலாளி கள்; ஒரு தம்பி. இவரது பெயர் கி.கனகவள்ளி.

* வள்ளிகிட்டே 'வாட்ச்' கிடையாதா? இருக்கு... இப்போ ரிப்பேராகி கிடக்குது!

* பட்டுச்சேலை கட்டினதுண்டா? நான் சம்பாதிச்சு தான் வாங்கணும்!

* தோனியா... கோலியா? நான் கிரிக்கெட் பார்க்கிறதில்லை!

* குளிர்சாதன அறை அனுபவம்? ஒரே தடவை 'ஏசி' பேருந்துல போயிருக்கேன்!

* மழை நேரத்துல ஐஸ்கிரீம்? எனக்கு மழை பிடிக்காது!

மழை பிடிக்காதா... ஏன்?

நான் 8ம் வகுப்பு படிக்கிற வரைக்கும் கூரை வீட்டுலதான் வாழ்ந்தோம். மழை நேரத்துல வீடெல்லாம் ஒழுகும். எனக்கு மழை பிடிக்காம போனதுக்கு இந்த வாழ்க்கை முதல் காரணம்!

கனகவள்ளியின் அடையாளம் என்ன?

கல்லுாரி விடுதியில 'டிவி' இருக்குன்னாலும் நான் பார்க்க மாட்டேன்; ப்ரெண்ட்ஸ்கிட்டே 'அயர்ன் பாக்ஸ்' வாங்கி பயன்படுத்த மாட்டேன்; ப்ரிட்ஜ் தண்ணீர் குடிக்க மாட்டேன்; 'என்னைக்கு இந்த பொருளெல்லாம் நம்ம வீட்டுக்கு வருதோ அன்னைக்குத் தான் இதெல்லாத்தையும் பயன்படுத்தணும்'னு கொள்கையோட இருக்குறேன்!

இந்த கனகவள்ளி நாளிதழ் பிரியர். பள்ளி நாட்களில் தேநீர் கடையில் அமர்ந்து நாளிதழ் புரட்டும் பழக்கம் கொண்டவர். நாளிதழ் வாசிப்பதை அன்றாட கடமைகளில் ஒன்றாக இன்றும் தொடர்பவர்!

பிச்சை புகினும்...

அமெரிக்காவுல இருக்கிற எங்க ஊர் அண்ணன் ஒருத்தரோட உதவியாலதான் இப்போ காலேஜ் படிக்கிறேன். 'பிச்சையெடுத்து இப்படி படிக்கணுமா'ங்கிற வார்த்தையெல்லாம் கேட்டுட்டேன். 'பிச்சை எடுத்தாவது படிச்சு முன்னேறிடணும்'னு நினைக்கிற என்னை,இம்மாதிரியான எந்த அம்புகளும் காயப்படுத்துறது இல்லை!

மூன்று பெட்டி கடைகள், ஒரு தேநீர் கடை மட்டுமே வேப்பங்குடி கிராமத்திற்குள் இருக்கிறது. பிற தேவைகளுக்கு ஒரு கி.மீட்டர் துாரம் செல்ல வேண்டும். விவசாயம் இக்கிராமத்தின் பிரதான தொழில்!

பயணங்கள் மனம் செதுக்கும் என்பது...

உண்மை; என் கிராமத்துல இருந்து அதிகாலையில 4:30 மணிக்கு முதல் பஸ் ஏறினா 6:00 மணிக்கு கரூர். அங்கே இருந்து கோவைக்கு 'ஒன் டூ ஒன்' பஸ்ல ஏறினா, 145 ரூபாய் டிக்கெட்; சாதாரண பஸ்ல 100 ரூபாய்ங்கிறதால அதுல போவேன். ஏதாவது சாப்பிட தோணுச்சுன்னா ரெண்டு கடலை மிட்டாய் போதும் எனக்கு!

இந்த வாழ்க்கை பிடிச்சிருக்கா கனகவள்ளி?

பணத்தால சந்தோஷத்தை தேடுறதுக்கு நான் வளர்ந்த சூழல் வாய்ப்பு கொடுக்காததால இந்த வாழ்க்கை ரொம்பவே பிடிச்சிருக்கு.

வாய்ஸ் பபுள்'ஊரை விட்டு போய் படிக்கிறது பாதுகாப்பா'ன்னு கேட்குற அளவுக்குத்தான் என் கிராமத்தோட வளர்ச்சி இருக்கு!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us