தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண்மை என் பெருமை

பெண்மை என் பெருமை

பெண்மை என் பெருமை


PUBLISHED ON : மார் 24, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 24, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிறந்து நான்கு நாட்களே ஆன மென் பட்டு தேவதையின் இதழ்களில், பூ பூக்கும் அந்த ஒற்றை வினாடிக்காக காத்திருக்கிறார் அனு.

இதோ... இதோ... அந்த தருணம்... ஆஹா... உறங்கும் தேவதை தன் இதழ் பிரிக்கத் துவங்க, 'வாவ்...' - தான் ரசித்ததை தன் கேமராவிற்குள் சிறை பிடிக்கிறார். தாய் அருகிருக்க, பட்டுப்பூவின் உறக்கம் கலைக்காமல் அடுத்த உடையை சர்வினா அணிவிக்க, அடுத்த பரவச தருணத்திற்காக காத்திருக்கத் துவங்குகிறது அனுவின் கேமரா.

பிஞ்சு விரல்கள், பட்டு பாதங்கள் - பேரழகு எதில்?



நம்ம கன்னங்களை தீண்டுறப்போ விரல்கள்; காற்றை உதைச்சு விளையாடுறப்போ பாதங்கள்; இந்த பதில், உங்க திருப்திக்காகத்தான்! பின்னே... மொத்தமும் பேரழகுன்னு சொல்றப்போ, ஒண்ணை மட்டும் பிரிச்சு சொல்லச் சொல்றது எந்தவகையில நியாயம்?

ரசித்து சொல்லும் அனுவும் சர்வினாவும் தோழிகள்; கோவைவாசிகள்; பிஞ்சு குழந்தைகளை புகைப்படம் எடுப்பதில் வல்லவர்கள்; கோவை, போட் ஹவுஸ் அருகிலிருக்கும் 'பேபி ட்ரையல்ஸ்' புகைப்பட நிறுவனத்தின் உரிமையாளர்கள். 34 வயதாகும் அனுவுக்கு, இரண்டு குழந்தைகள். 32 வயது சர்வினாவுக்கு, ஒரு பெண் குழந்தை.'ஸ்டுடியோவுக்குள்ளே குழந்தை வந்துட்டா, அந்த குழந்தைக்கு நாங்களும் அம்மா!' - தாய்மை மின்ன பேசும் இருவரும் இப்புகைப்பட கலைக்கென பிரத்யேக பயிற்சி பெற்றிருக்கின்றனர்.

சராசரி பெண்களுக்கும் அனுவுக்கும் என்ன வித்தியாசம்?



வீட்டுக்குள்ளே அடைஞ்சு கிடந்துடக் கூடாதுன்னு நினைக்கிறவ நான். என் பொண்ணு ஆறு மாத கைக்குழந்தையா இருந்தபோதே, அவளை துாக்கிட்டு போட்டோ ஷூட்டுக்கு கிளம்பியிருக்கேன். நான் இப்படித்தான்!

இந்த தொழில் ஆண்களுக்கு சாத்தியமில்லையா சர்வினா?



இங்கே வர்ற குழந்தைகளை நாங்க தாயா இருந்து கவனிச்சுக்கிட்டாலும், தாயால மட்டுமே சாத்தியப்படுற சில விஷயங்களை நாங்க பண்ண முடியாது. அப்படி இருக்குறப்போ, ஆண்கள் இப்பணியில இருந்தா வர்ற இளம் தாய்களுக்கு அசவுகரியமா இருக்கும். இதைவிட முக்கியம், இந்த வேலைக்கு அதீத பொறுமை அவசியம்!

'ஒருத்தர் கருத்துக்கு இன்னொருத்தர் மதிப்பு தரணும்; ஒருத்தர் சோர்ந்து போற தருணத்துல இன்னொருத்தர் துாக்கி சுமக்கணும்; இதெல்லாம்... இயற்கையாகவே எங்களுக்குள்ளே இருக்குற குணம். இதுதான், இப்போ எங்க பலம்!' - அவர்கள் கேமரா வீசும் 'பளிச்' போலவே மின்னுகிறது தோழியரின் நட்பு.

அனு, சர்வினாவின்புதுப்புது அர்த்தங்கள்



குழந்தை - அழகு

புன்னகை - கடவுள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us