தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!


PUBLISHED ON : செப் 04, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 04, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மோதிப் பார்க்கலாம் வா' எனும் பெரும் வீரத்தை மனதிற்குள் மறைத்து புன்னகைப்பவர் சங்கீதா. நம் கேள்விகள் அவரை சீண்டும் தருணங்களில், விழிகளில் தெறிக்கிறது அவ்வீரம்! பூர்வீகம் திருச்சி மாவட்டத்தின் மீனாட்சிபுரம்; வசிப்பிடம்... சென்னை பாலவாக்கம்!

'கிராமம் டூ நகரம்' சங்கீதா சந்தித்த சவால்கள்?

'குக்கர்' அறிமுகம் இல்லாத குக்கிராமம் என்னோடது! 2011ம் ஆண்டு திருமணமாகி சென்னை வந்த எனக்கு, இந்த பரபரப்பு ரொம்பவே புதுசா இருந்தது! அப்படியே பழகப் பழக, இந்த வாழ்க்கைதான் 'நான் யாரு'ன்னு எனக்கு அடையாளம் காட்டுச்சு!

இடைவிடாமல் 24 மணி நேரம் 'கராத்தே'வில் ஈடுபட்டு, 2019ல் முதல் உலக சாதனையையும், 2022ல் 100 கிலோ எடை கொண்ட 11 கற்களை அடுத்தடுத்து தன் மேல் ஏற்றி உடைத்து இரண்டாவது உலக சாதனையையும் நிகழ்த்தி இருக்கிறார். கணவர் அய்யப்பன் தற்காப்புக்கலை பயிற்சிக்கூடம் நடத்துகிறார்; பயிற்சியாளர்களில் ஒருவர் சங்கீதா!

'உன்னால் முடியும்' - இந்த தைரியத்தை தர்றது மனசா; தற்காப்பு கலையா?

நிச்சயம் மனசுதான்; தற்காப்பு கலை... கூடுதல் பலம்! மனசை ஒருநிலைப்படுத்துற இந்த கலை ஆண்களை விட பெண்களுக்கு அவசியம்னு நான் நம்புறேன்; குறிப்பா, குழந்தை பிறந்த பிறகு தன்னோட வாழ்க்கை அவ்வளவுதான்னு நினைக்கிற பெண்களுக்கு இந்த கலை ரொம்பவே முக்கியம்!

ஓர் ஆணுக்கு சாத்தியமாகும் அனைத்தும் பெண்ணுக்கும் சாத்தியமா?

'என்னால் முடிந்தது ஒரு பெண்ணால் முடியாது'ன்னு ஆண்கள் சொல்றதை நிறுத்துற வரைக்கும், 'எல்லாமே எங்களுக்கு சாத்தியம்'னு பெண்கள் நிரூபிச்சாகணும்; நிரூபிச்சுட்டுதான் இருக்குறோம்.

'கராத்தே' மட்டுமில்லாமல் டேக்வாண்டோ, யோகா பயிற்சியும் அளிக்கும் சங்கீதாவிற்கு வயது 30. 'வலி தாங்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும்' என்பவருக்கு இரு பெண் குழந்தைகள்!

'பாதுகாப்பு கூட பணம் இருந்தால்தான் கிடைக்கும்'ங்கிற சூழல் ஆரோக்கியமானதா?

என்ன கேட்க வர்றீங்கன்னு புரியுது; 'தற்காப்பு கலை' பயிற்சிக்கு நான் கட்டணம் வாங்குறது உண்மை; ஆனா, அதை கொடுக்க முடியாத சூழல்ல இருக்கிறவங்களை நான் கட்டாயப்படுத்துறது இல்லை. காரணம்... இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மாவா இந்த சமூகத்தைப் பார்த்து நான் ரொம்பவே பயப்படுறேன்.

'தற்காத்துக் கொள், விழிப்போடு இரு' என்பதோடு, பயிற்சிக்கு வருபவர்களிடம் சங்கீதா போதிக்கும் மிக முக்கிய பாடம்... 'பிரச்னை களத்தில் குரல் உயர்த்து!'

சங்கீதா அய்யப்பனின் புதுப்புது அர்த்தங்கள்

பயம்? - விளக்கு

கராத்தே? - நம்பிக்கை

பார்வை? - கேடயம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us