தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!


PUBLISHED ON : ஏப் 02, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நான் தப்பான வழியில போனா... அவளும் அப்படி போகணுமா; என்னால மன்னிக்க முடியலை மேடம்!'

கோபமும் வருத்தமும் கொந்தளிக்க பேசும் அந்நபரை பேச அனுமதித்து காத்திருக்கிறார், குடும்ப ஆலோசகரான கு.ப.கோதனவல்லி; 69 வயது நிரம்பிய இவர் கோவை, கணபதியைச் சேர்ந்தவர்; சுதந்திர போராட்ட தியாகி ஜி.பி.வேலனின் மகள்!

அவருக்கு நீங்க தந்த ஆலோசனை என்ன ?

'உங்களுடைய இப்போதைய தேவை மன்னிக்கிற மனம்; அதாவது, உங்களை நீங்களே மன்னிக்கிற மனம்! அதுக்கு உங்க தவறை நீங்க உணரணும்; உங்களுக்குள்ளே குற்றவுணர்வு வரணும். இது நடந்தா, உங்க மனைவி செஞ்சது துரோகமா தெரியாது'ன்னு சொன்னேன். 'என் குடிப்பழக்கம்தான் என் மனைவி தடம் புரள காரணம்னு ஒத்துக்குற தைரியம் எனக்கில்லை மேடம்'னு தேம்பி அழுதார்!

பிரிஞ்சவங்க கண்டிப்பா சேர்ந்தே தான் ஆகணுமா?

'பிரிந்தவர்கள் சேர்ந்தால் நன்மையே'ன்னு நான் சொல்லவே மாட்டேன்; சில இடத்துல பிரிவுதான் நல்ல தீர்வு! மகளிர் காவல் நிலையம், குடும்ப நல நீதிமன்றங்கள்ல கடந்த 23 ஆண்டுகளா ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஆலோசனை தந்திருக்கேன். பிரச்னையை புரிய வைக்கிறதும், நம்பிக்கையை கொடுக்குறதும் தான் என் நோக்கம்; முடிவு அவங்கவங்க கையில!

இப்பணிக்காக தமிழக அரசின் 'சிறந்த சமூக சேவகர்' விருது பெற்றிருக்கும் இவர், சில கல்லுாரிகளில் ஆசிரியர் - மாணவர் ஆலோசகராகவும், சில தொழில் நிறுவனங்களில் 'விசாகா' கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார். பாலியல் வன்முறையில் பாதித்தவர்களுக்கு ஆலோசனை தருகையில் மட்டும் கலங்கிப் போகிறார்.

'அமைதியான வாழ்க்கை' இல்லா விடில் இச்சேவை சாத்தியமா?

லண்டன், ஐதராபாத்ல மகன்கள்; வங்கி மேலாளர் பணியில இருந்து ஓய்வு பெற்ற கணவர்; இதனால இப்படி கேட்குறீங்கன்னு நினைக்கிறேன்! என்னோட 20 வயதுல, சொந்தமா பேக்கரி நடத்தி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு ரொட்டி தந்திருக்கேன்! கோவை குண்டுவெடிப்புல பாதிக்கப்பட்டவங்க வீடு தேடிப் போய் ஆறுதல் சொல்லியிருக்கேன். என் வாழ்க்கை எப்படி இருந்திருந்தாலும் நான் இப்படித்தான் வாழ்ந்திருப்பேன்!

ஆரோக்கிய குடும்பத்தின் அடையாளங்கள்?

வெளிப்படை தன்மை! இரவு உணவை சேர்ந்து சாப்பிடணும்; மாத செலவினங்களை குழந்தைகளோடு திட்டமிடணும்; மற்றவர் கருத்தை மதிக்கணும்!

மனைவியர் வாசிக்கும் பொதுவான புகார்?

'அந்த ஆளு என்கிட்டே அன்பா பேசினதே இல்லை!'

கணவர்கள் தரப்பில்...

'எல்லா விஷயங்களையும் அவங்க அம்மாவுக்கு போன் போட்டு சொல்றா!'

கு.ப.கோதனவல்லியின் புதுப்புது அர்த்தங்கள்*இல்லறம்? - சவால்*அன்பு? - புரிதல்*பிரிவு? - வாய்ப்பு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us