தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/அவளே சரணம்!

அவளே சரணம்!

அவளே சரணம்!


PUBLISHED ON : ஏப் 09, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 09, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வழக்கமான ஒரு நாளா கத்தான் 2022, பிப்ரவரி 26ம் தேதியையும் நினைத்திருக்கிறார் மஞ்சுளா. ஆனால், அவரது வாழ்வின் பெரும் மாற்றத்திற்கான துவக்க நாள் அது!

பிப்ரவரி 26, 2023; 'சார்... இளநீர் குடிக்கிறீங்களா; அம்மா... இளநீர் சாப்பிடுங்க!' - செங்கல்பட்டு, ஆத்துார் வேதபாடசாலை எதிரில், தன் கூரை கடையை கடப்பவர்களிடம் வாய் ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கிறார் 53 வயது மனோகரன்.

கடந்த ஓர் ஆண்டு காலமாக மனைவி சொல்லுக்கு மறுபேச்சு கிடையாதாம்! அதற்கு முன்...

'ஏன் உயிர் வாழணும்னு ஒவ்வொரு நிமிஷமும் யோசிச்சிருக்கேன்; ஆனாலும், தவறான முடிவுக்கு போகலை; அவரை பிரியலை!' - மஞ்சுளா சொல்லச் சொல்ல குற்றவுணர்வில் தலைகுனிந்து கொண்டார் மனோகரன்.

அந்த அளவுக்கா மோசமா நடந்துக் கிட்டீங்க மனோகரன்?

திருமணமாகி 33 ஆண்டுகள்ல ஒருநாள் கூட மஞ்சுளா நிம்மதியா இருந்ததில்லை. எல்லாத்துக்கும் காரணம் என் குடிப்பழக்கம். 15 சென்ட் நிலம், அவ தாலி எல்லாத்தையும் குடிச்சே அழிச்சேன். இழந்த பொருளை கண்டிப்பா சம்பாதிச்சிடுவேன்; ஆனா, அவ இழந்த நிம்மதியை திருப்பிக் கொடுக்க முடியுமா!

இவ்வளவு கசப்புக்கு அப்புறமும் இனி என்ன இருக்கு மஞ்சுளா?

விடிய விடிய துாங்காம பலநாட்கள் இருந்திருக்கேன். 'இவரை விட்டு போயிரணும்'னு நினைக்குறப்போ எல்லாம், 'நீயும் கைவிட்டுட்டா இந்த மனுஷனை யார் பார்த்துக்குவா'ன்னு மனசு கேட்கும்; புருஷனை நேசிக்கிற எந்த பெண்ணால இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும்! செங்கல் சூளை, சித்தாள் வேலை, வயக்காட்டு வேலைன்னு குடும்பத்துக்காக உழைக்க ஆரம்பிச்சிட்டேன்!

இப்போ ஒரு வருஷமா நிம்மதியா துாங்குறேன்; விசேஷ வீடுகளுக்கு கவுரவமா போயிட்டு வர்றோம்; 'இனி இழக்குறதுக்கு ஒண்ணுமில்லை'ன்னு திருந்தி வந்து நிற்கிற மனுஷனை, தாயா இருந்து பார்த்துக்குறேன்; இது போதுங்க என் கடைசி காலம் வரைக்கும்!

'குடியை மறந்து முதலாம் ஆண்டு தினம்' போஸ்டர் ஒட்டி தன்னைத்தானே கொண்டாடிய மனோகரனின் வாழ்க்கையும், அவரது வாழ்க்கைத் துணையின் மனநிலையும் எப்படி இருக்கிறது என்பதை தமிழகம் அறிய வேண்டும் என்பது 'கண்ணம்மா'வின் விருப்பம்... கடமையும் கூட; இதனால் மட்டுமே இச்சந்திப்பு!

'மனோகரன் குடி மறந்தது மஞ்சுளாவால் தான்' - சொல்லலாமா?

நான் அப்படி சொல்ல மாட்டேன்; ஆனா, கூலி வேலை பார்த்து என் நாலு பசங்களையும் ஆளாக்கி திருமணம் பண்ணி வைச்ச என் போராட்டத்தை அவருக்கு புரிய வைச்சிருக்கேன்!

'போஸ்டர்' எதனால் மனோகரன்?

'நம்மால ஒரு குடும்பமாவது மீளாதா...'ங்கிற நப்பாசை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us