தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!


PUBLISHED ON : நவ 16, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 16, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இருள் சூழ்ந்த காடு' என்பதைக் கேட் டதும், கற்பனையில் அக்காட்டை வடித்து இருள் உணர்பவர் ரசனைக் காரர்; 'அக்காட்டின் மையத்தில் ஊடுருவிப் பாயும் நிலவொளியில் ஆசையுடன் நடனமிடும் பட்டாம்பூச்சி' என்றதும், அக்காட்சியை மனத்திரையில் வடித்து அந்நடனம் ரசித்து புன்னகைப்பவர் பெரும் ரசனைக்காரர்; இந்த ரஞ்சனா... பெரும் ரசனைக்காரர்!

ரஞ்சனாவின் கற்பனை உலகம் எப்படியானது?

'பொன்னியின் செல்வன், வேள்பாரி' கதைகளை கேட்குறப்போ, அவங்க நடமாடின காடுகளுக்குள்ளே நானும் போயிடுறேன். அவங்க கடந்து போற நதிகளை நானும் கடக்குறேன். யுத்த களத்துல ஓரமா நின்னு வேடிக்கை பார்க்குறேன். இம்மாதிரியான கற்பனைகளாலதான் என் வாழ்க்கை அழகா இருக்குன்னு நம்புறேன்!

சேலம் மாவட்டம் வலசையூர் அருகேயுள்ள பள்ளிப்பட்டியைச் சேர்ந்த ரஞ்சனா சுப்பிரமணிய பூபதி, வலசையூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆண்டு கால அனுபவம் கொண்ட ஆங்கில ஆசிரியை!

ரஞ்சனாவின் சமீபத்திய சந்தோஷம்?

'தோசைக்கல்லோட மையத்துல மாவை ஊற்றி துல்லிய வட்டமா அதை பரப்பி ஒரு தோசை சுடணும்'னு ரொம்ப நாளா ஆசை! சமீபத்துலதான் அது நிறைவேறுச்சு. என்னோட இந்த 34 ஆண்டு கால வாழ்க்கையில நான் நேர்த்தியா சுட்ட முதல் தோசை அதுதான்!

ஆசிரியை ரஞ்சனா... பார்வை திறனற்றவர்! ரஞ்சனாவின் கணவர் பழக்கடை ஒன்றில் பணியாற்றுகிறார். மகள் கொன்றைக்கு வயது ஒன்று!

இந்த சமூகத்திடம் உங்களின் எதிர்பார்ப்பு?

பார்வை இல்லாத பெண்களுக்கு பேருந்து பயணத்துல இருக்கை தர்றதை விட, பாலியல் தொந்தரவுகள் இல்லாத வகையில அவங்க பயணத்தை பாதுகாப்பா தர்றது சமூகத்தோட கடமை!

'மனம் மாயங்கள் செய்யும்' என்பது உண்மையா?

'மத்தவங்களுக்கு புரியுற மாதிரி கற்றுக்கொடுக்குற திறமை உனக்கிருக்கு; ஆசிரியர் பணிக்கு முயற்சி பண்ணு'ன்னு எனக்கு நம்பிக்கை தந்தது என் மனசு. 'உனக்கேற்ற துணை; திருமணம் பண்ணிக்கோ'ன்னு என் வாழ்க்கைத் துணையை கண்டுபிடிச்சு தந்தது என் மனசு. 'உனக்கிருக்கிற குறைபாட்டோட உன் குழந்தை இருக்காது; தைரியமா குழந்தை பெத்துக்கோ'ன்னு நம்பிக்கை தந்ததும் என் மனசு. உண்மைதான்... மனம் மாயங்கள் செய்யும்!

கொன்றைக்கும் உங்களுக்கும் புரிதல் எப்படி?

தனக்கு துாக்கம் வருதுன்னா என் கண்களை தொட்டு எனக்கு புரிய வைக்கிறா; நான் துாக்கணும்னா என் கை விரல்களை பிடிச்சு உணர்த்துறா; என்னை குறையோட படைச்ச கடவுள் தன் தப்புக்கு செஞ்ச பரிகாரம்... கொன்றை!

உங்கள் பெண்மையை பரிபூரணமா உணர வைக்கிற ஒரு கொள்கை?

'எல்லாவற்றையும் முயற்சித்து விடு!'

ரஞ்சனாவின்புதுப்புது அர்த்தங்கள்*சோகம்? - பலுான்*கவிதை? - மகள்*உறவுகள்? - நம்பிக்கை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us