தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/நிழல் பேசும் நிஜம்/லூசிபர் (மலையாளம்)

லூசிபர் (மலையாளம்)

லூசிபர் (மலையாளம்)


PUBLISHED ON : ஜூன் 23, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 23, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீட்டுக்குள்ளே வந்ததும் வராததுமா, 'ஜான்வி எங்கே?'ன்னு என் கணவர் பாபி கேட்குறப்போ எல்லாம், அதை பாசத்தோட வெளிப்பாடா நினைச்சேன். அவளுக்குப் பிடிச்சதை தேடித்தேடி அவர் வாங்கிட்டு வர்றப்போ, மனசளவுல ரொம்பவே நெகிழ்ந்தேன்.

'ஜான்விக்கு ரொம்ப செல்லம் கொடுத்து அவளை வீணாக்கிடாதீங்க!' - இதுதான், அவர்கிட்டே நான் அடிக்கடி சொல்ற அறிவுரை.

ஜான்விக்கு வயசு, 17. ஆனா, அவளோட மாச செலவு, 1.75 லட்ச ரூபாய். 'இந்த வயசுல இவ்வளவு செலவுக்கு என்னடி அவசியம்?'ன்னு நான் கோபப்பட்ட நேரத்துல, பாபி வந்து என்னை சமாதானப்படுத்தினார்; ஜான்வியை காப்பாத்தினார்.

ஒருநாள்...

ஜான்வி போதை மருந்துக்கு அடிமையாகி இருந்த விஷயம் எனக்குத் தெரிஞ்சது.

'இதுக்கு யார் காரணம் ஜான்வி?' - நான் அழுதேன்.

'உன் புருஷன் தான்; அவன் கொடுக்குற பாலியல் தொந்தரவும் தாங்க முடியலை; என்னை காப்பாத்தும்மா...'ன்னு ஜான்வி கதறுனா! நான், பாபியோட சட்டையை பிடிச்சேன்.

'ஆமா ப்ரியா... நான் தான்; ஜான்வி... உனக்கு மட்டும் தான் பொண்ணு; நான், உன் ரெண்டாவது புருஷன்!' - தன் அரக்க குணத்தை காமிச்சான் பாபி.

மறுமணத்துல... 'நல்ல தகப்பனை' தேர்ந்தெடுக்காத என் தப்பு எனக்குப் புரிஞ்சது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us