
நான் குழப்பத்துல இருந்தப்போ தெளிவு தந்தவன் விஜய்; அதனால அவன் என் நண்பன். பணி வாய்ப்புக்காக போன இடத்துல, பணி வழங்குற பொறுப்புல அவன். என்னை பார்த்ததும், 'உடனே வேலையில சேர்ந்துடு சம்யுக்தா'ன்னு சொன்னான்; இதனாலும் அவன் என் நண்பன்.
ஆனா, என் எண்ணத்தை தனக்கு சாதகமா நினைச்சுட்டு அவன் செஞ்சது ரொம்ப பெரிய தப்பு!
'என்னை காதலிக்கிறதை என்கிட்டே சொல்லாம, ஏன் என் குடும்பத்துக்கிட்டே சொன்னே விஜய்?'
'உன் குடும்பம் ஒத்துக்கிட்டா நீயும் ஒத்துக்குவேன்னு நினைச்சேன்!'
'என் குடும்ப விருப்பமும், என் விருப்பமும் ஒரேமாதிரி தான் இருக்கும்னு எப்படி முடிவு பண்ணுனே?'
'உன் விருப்பம் என்ன?'
'எனக்கு சொந்தமா தொழில் துவக்கணும்; அதுவரைக்கும், கல்யாணத்தை பற்றியெல்லாம் யோசிக்க முடியாது!'
'என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என் கம்பெனியில நீயும் பார்ட்னர்; இது மூலமா உன் விருப்பத்தை சுலபமா அடையலாமே!'
'இல்ல விஜய்... எனக்கு எது கிடைச்சாலும், அது எனக்கு பிடிச்ச விஷயத்துல நானே சாதிச்சதா இருக்கணும்!'
'சம்யுக்தா... நான் தலையாட்டினா நுாறு பொண்ணுங்க வரிசையில நிப்பாங்க!'
யப்பா சாமிகளா... நீங்க இன்னும் வளரவே இல்லையாடா!
படம்: மிஸ் இந்தியா

