
'சீக்கிரமா வாழ்க்கையில செட்டிலாகுற வழியைப் பாரு; உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்; அதெல்லாம் உனக்கு செட் ஆகாது!' - இப்படி, 'அக்கறை' எனும் பெயரில் பெண்களுக்கு சொல்லப்படுற அறிவுரைகளுக்கு இன்னொரு அர்த்தம்... 'நீயாக எதையும் புதுசா முயற்சிக்காதே!'
'இந்திய விமானப்படையில சேரப் போறேன்'னு சொன்னப்போ, என் அண்ணன் இப்படியான அறிவுரைகளைத் தான் சொன்னான். ஆனா, அப்பா எனக்கு ஆதரவா இருந்ததால என் கனவை அடைய முடிஞ்சது. சரி... இந்த அறிவுரை பார்ட்டிகளை எப்படி கையாளணும்?
என் அண்ணனை எங்க அப்பா கையாண்ட மாதிரி!
அன்னைக்கு ராத்திரி அப்பா தனிமையில மது அருந்திட்டு இருந்தப்போ, அவர் மனசை மாற்ற அண்ணன் பேச்சு கொடுத்தான். 'அப்பா... சின்ன வயசுல பசங்களோட கிரிக்கெட் விளையாட குஞ்சனை அனுமதிச்சீங்க; ராத்திரியில சினிமா பார்க்க அனுமதிச்சீங்க; இதெல்லாம் அவளோட சந்தோஷத்துக்காக செஞ்சீங்க!
'அதெல்லாம் சரி... ஆனா, இப்போ அவளை விமானப்படையில சேர அனுமதிக்கிறது, அவளோட பாதுகாப்புக்கு நல்லதில்லைன்னு தோணுது. அவளை நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுக்குற திட்டமே இல்லையா?'
என் மேல உள்ள அக்கறை காரணமா இப்படி நீண்ட பிரசங்கம் பண்ணின அண்ணனுக்கு அப்பா சொன்ன பதில்... 'நீ குடிக்காமலே உளறிட்டு இருக்குறே...போய் துாங்கு!'
நன்றி அப்பா!
படம்: குஞ்சன் சக்சேனா (ஹிந்தி)

