sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கண்ணம்மா

/

நிழல் பேசும் நிஜம்

/

நிழல் பேசும் நிஜம்

/

நிழல் பேசும் நிஜம்

நிழல் பேசும் நிஜம்

நிழல் பேசும் நிஜம்


PUBLISHED ON : மார் 09, 2021

Google News

PUBLISHED ON : மார் 09, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நல்லாயிருக்கீங்களா; நாளைக்கு காலையில எனக்கு வளைகாப்பு! ஆனா...

'அப்பாவுக்கு ரொம்ப புடிச்ச பொண்ணு நீதானம்மா. இவ்வளவு பெரிய முடிவை என்னை கேட்காம எடுப்பேன்னு நான் நம்பலை!' - இது அப்பா. 'புள்ளைங்க அவங்கவங்க இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருந்தா ஊர்ல தலை குனிஞ்சு நிற்கிறது யாரு; அப்பா இப்படியானதுக்கு நீதான் காரணம்!' - அக்கா. 'உன் போன் வேணும்னா நீ வந்து எடுத்துக்கோ; நான் என்ன உனக்கு வேலைக்காரனா?' - தம்பி.

'நீ படிச்சதாலதான் இப்படி பண்ணிட்டேன்னு அப்பா எங்களை படிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாருக்கா!' - இது தங்கச்சி.வேற ஜாதி பையனை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதால, என் குடும்பத்துல உள்ளவங்க என்கிட்ட இப்படி பேசினாங்க! அவங்களுக்கு நேர்ந்த அவமானங்களுக்கு நான்தான் காரணம்னு நம்புறாங்க. 'வளைகாப்பு நடத்தணும்'னு அப்பா என்னை அழைச்சுட்டு வந்திருக்கார்.

ஆனா...'ப்ளீஸ்ப்பா... முடியலை... கதவைத் திறப்பா; உனக்கு புடிச்ச பொண்ணு நான்தானே... ஏன் இவ்வளவு கஷ்டத்தை கொடுக்குறே!' - நான்.

'அப்படியெல்லாம் விட்டுட முடியாதும்மா. உனக்கு ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. தண்ணியில விஷத்தை கலந்து கொடுத்தா 10 நிமிஷத்துல முடிஞ்சுடும்னு சொன்னாங்க; இவ்வளவு கஷ்டப்படுவேன்னு நினைக்கலை!' - என் அப்பா. அவ்வளவுதான்!

இன்னைக்கு நான்; நாளைக்கு...?

படம்: பாவக்கதைகள் - ஓர் இரவு






      Dinamalar
      Follow us