PUBLISHED ON : மார் 21, 2021

'பா.ஜ.,வை மக்களுக்கு பிடிக்கலை!' -- இப்படி யாரு சொல்றா;
ஆறு சீட்டு அரசியல்வாதிகள்!
'தனியார் மயம் அதிகமாயிட்டே வர்றது மக்களுக்கு நல்லதில்லை!'
-- இது யாரு; மக்கள் வரிப்பணத்துல ஊதியம் வாங்கி, மக்கள்கிட்டே முதலாளிகள் போல நடந்துக்கிற அரசு ஊழியர்கள்!
'மாற்றத்துக்கு மக்கள் தயாராயிட்டாங்க!'-
- இது... வெள்ளித்திரையில ஒரு காலும், பிரசார வீதியில ஒரு காலும்னு மையமா நிற்கிறவர்!
ஆனா...அய்யாமாரே... நீங்க சொல்ற மாதிரி எல்லாம் நாங்க நினைக்கலையே!
'செல்போன் கோபுர கதிர்வீச்சால் உடல்நலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது; அதனால், குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரங்கள் அமைக்க மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்'னு தமிழக தொலை தொடர்புத் துறை வேண்டுகோள் வைக்குது. இதுக்கு பதிலா... மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்ட மாதிரி, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எல்லாரும் அவங்கவங்க வீட்டுக்கு மேல செல்போன் கோபுரம் அமைக்கலாமே!
'கறவை மாடு தேவைப்படுறவங்க கூட தி.மு.க., தலைவர் ஸ்டாலின்கிட்டே மனு தர்ற இந்த நேரத்துலேயும், 'தடகள பயிற்சிக்கு ஷூ தேவை'ன்னு ராகுல் காந்திகிட்டே போய் கன்னியாகுமரி சிறுவன் பெலிக்ஸ் சொல்லியிருக்கான். ஆக... 100 நாள் குறை தீர்ப்பு திட்டத்தை தம்பி நம்பலை... ம்ஹும்... தம்பியே நம்பலை!1,000 ரூபாய் தர்றதா சொன்னா நான் ஏமாந்திருவேனா!

