
'குடிக்கிறதுக்காக மோதிரத்தை திருடிட்டான்'னு முரளியை சிலர் அடிச்சப்போ முரளியோட அம்மா அழுதாங்க; மனைவியான நான் கண்ணீர் விடலை!
படிக்கிற மகளோட மேஜையை வித்து குடிச்சபோதும், அவ கழுத்து செயினை திருடின போதும், பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு நாள்ல போதையில விழுந்து கிடந்த போதும் நான் அழவே இல்லை. போதையில ஆடை கலைஞ்சு கிடந்தவரை ஆட்டோவுல சிலர் துாக்கிட்டு வந்து வீட்டு வாசல்ல போட்டபோதும் நான் கலங்கலை. போதையில ஏற்பட்ட பிரச்னை காரணமா முரளி சிறைக்கு போன சமயத்துல கூட, நான் அவரை பிரிஞ்சு வந்தேனே தவிர அழவே இல்லை!
'சுனிதா... முரளி குடியை விடணும்னு நினைக்கிறான். நீ அவன் பக்கத்துல இருக்க முடியுமா'ன்னு மருத்துவர் கேட்டப்போ, 'டாக்டர் இந்த ஆளு செத்துப் போய் ரோட்டுல கிடக்கிறதுல எனக்கு விருப்பமில்லை. ஏன்னா... இவர் என் மகளுக்கு அப்பா. இந்த ஆளை குறைந்தபட்ச மனுஷனா வாழ வைக்குற உங்க முயற்சிக்கு என்ன உதவின்னாலும் செய்றேன்'னு சொன்னேன்.
'கணவனின் கீழ்மை குணங்களுக்காக புலம்பி என் வாழ்வை நாசமாக்க மாட்டேன்!' - நான் அழாததன் காரணம். 'கணவன் எனக்கு தேவையில்லை; ஆனால், என் உதவி அவனுக்கு தேவை!' - மருத்துவரிடம் பேசிய வார்த்தைகளுக்கான அர்த்தம்.
படம்: வெல்லம் (மலையாளம்)

