
திருமணமாகி 5வது மாதத்துல கணவரை இழந்த அடுத்த நாளே துவங்கிடுச்சு, எனக்கான முடிவுகளை பிறர் எடுக்கும் விவாதங்கள்.
'உங்க பொண்ணு சந்தியாவை கொஞ்சநாள் உங்க வீட்ல வைச்சிருந்து அனுப்புங்க'ன்னு புகுந்த வீட்ல எடுத்த முடிவுக்கு 'அவ இங்கேயே இருக்கட்டும்'னு பிறந்த வீட்ல முடிவு எடுத்தாங்க. 'நாம யாரும் பழமைவாதிகள் கிடையாது.
விதவைகளுக்கு வரன் பார்க்க பிரத்யேக வெப்சைட்ஸ் நிறைய இருக்கு. அதுல நல்ல இடமா பார்த்து சந்தியாவுக்கு மறுமணம் பண்ணிடலாம்'னு முடிவு எடுத்துட்டு, அவங்களோட தாராள மனப்பான்மையை அவங்களே புகழ்ந்துக்கிட்டாங்க.
கணவர் இறந்ததும் எனக்கான காப்பீடு தொகை வந்தது. எனக்கு மறுமணம் செய்து வைப்பதாக பேசின தாராள மனசுக்காரங்க இப்ப என்னை அவங்க சொந்தத்திலேயே ஒருத்தருக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவை எடுத்தாங்க. குடும்ப சூழ்நிலையை காரணமாக்கி என்னையும் அந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைச்சாங்க.
அவங்களோட முடிவுகளின் வழியா என் வாழ்க்கை என்னிடமிருந்து அபகரிக்கப்படுதுன்னு உணர்ந்த வினாடியில முதல்முறையா ஒரு முடிவு எடுத்தேன்.
'இனி எனக்கான முடிவுகளை நான் தான் எடுப்பேன்.'
படம்: பக்லைட் (ஹிந்தி)

